எபிரெயர், ஏழாம் அதிகாரம் #2 57-0922E 238. உங்களை ஆசீர்வதிப்பாராக! சில நிமிடங்களுக்கு முன்னால் என்னுடைய சகோதரன், மாம்சபிரகாரமான ஒரு சகோதரன், டாக் என்னிடத்தில் முதலில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய…ஒரு சிறு குழந்தை இங்கே நம்மிடத்தில் உள்ளது என்று கூறினார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அந்தத் தாய்மார்கள் தங்களுடைய சின்னஞ்சிறு குழந்தைகளை கர்த்தருக்குப் பிரதிஷ்டை செய்ய விரும்பி அவைகளை வைத்துக்கொண்டிருந்தால், நாங்கள் அவைகளை இப்பொழுதே பிரதிஷ்டை செய்ய மகிழ்ச்சியடைவோம். எனவே அவர்கள் தங்களுடைய சின்னஞ்சிறு குழந்தைகளை மேலேக் கொண்டு வரலாம். 239 இப்பொழுது, அநேக ஜனங்கள், அவர்கள் என்னவென்று அழைத்தாலும், அவர்களோ அக்குழந்தைகளுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறார்கள். மெத்தோடிஸ்டு சபை அதைச் செய்கிறது, நசரேயன்களும் அவ்வாறு செய்கின்றனர் என்று நான் நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகவே அதைக் குறித்து சரியாகத் தெரியவில்லை. இல்லை. அதனால்தான் அவர்கள் பிரிந்துவிட்டனர், அதாவது நசரேயன்களும், சுயாதீன மெத்தோடிஸ்டுகளும் பிரிந்தது குழந்தை ஞானஸ்நானத்தில்தான் என்று நான் நினைக்கிறேன். ஆனால், எப்படியாயினும், அவர்களில் சிலர், அவர்கள் ஒரு காரியத்தையும், மற்றவர் மற்றொரு காரியத்தையும் செய்கின்றனர். ஆனால் அவர்களில் சிலர் குழந்தைகளின் மீது கொஞ்சம் தண்ணீரை ஊற்றுகிறார்கள். சிலர் அவைகளின் மேல் தெளிக்கிறார்கள். ஆனால் நாம் எப்பொழுதுமே அதை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்துகொள்ள வேதாகமத்தோடு நெருக்கமாகவே தரித்திருக்க முயற்சிக்கிறோம். இப்பொழுது, ஒரு குழந்தை தெளிக்கப்படுவதற்கான எந்த ஒரு வேதவாக்கியமும் வேதாகமத்தில் இல்லை. அதேபோன்று எந்த நபருமே தெளிக்கப்படுவதற்கான எந்த ஒரு வேதவாக்கியமும் வேதாகமத்தில் இல்லை. அது வேதப்பிரகாரமான காரியமல்ல. அது கத்தோலிக்க முறைமையாயுள்ளது. 240 ஆனால் அவர்கள்—ஆனால் அவர்கள் கொண்டு வந்தபோது…அவர்கள் சிறு பிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தனர். நாம் அவரை பிரிதிநித்துவப்படுத்த வேண்டும். அவர் செய்த அதேக் காரியத்தை நாம் செய்ய வேண்டும். அவர் தம்முடைய கரங்களை அவைகளின் மீது வைத்து, அவைகளை ஆசீர்வதித்து, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார். நாம் உண்மையாகவே வேதாகமத்தின் பேரில், அர்ப்பணிக்கப்பட்ட வழியில், எப்படி செய்ய வேண்டும் என்று நாம் அறிந்துள்ள மிகச் சிறந்த முறையில் தொடர்ந்து செயல்பட முயற்சிக்கிற காரணத்தால், அதைத்தான் நாம் இங்கே கூடாரத்தில் தொடர்ந்து செய்யவிருக்கிறோம். 241 ஆகையால் இப்பொழுது, அந்தத் தாய் இல்லை தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை பிரதிஷ்டை செய்யயும்படியாக வைத்துக்கொண்டிருந்தால், சகோதரி கெர்டி அவர்கள் அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள் என்ற பாடலை இசைத்துக்கொண்டிருக்கையில், ஏன், நீங்கள் அவர்களை பீடத்தண்டைக்குக் கொண்டு வாருங்கள். அப்பொழுது சகோதரனும் நானும் வந்து, அச்சிறு குழந்தைகளை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்வோம். சரி. சகோதரன் நெவில்.[சகோதரன் பிரான்ஹாம் மற்றும் சகோதரன் நெவில் அவர்களும் குழந்தைகளைப் பிரதிஷ்டை செய்கிறார்கள். ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] 242 சகோதரி.கெர்டி, உங்களுக்கு நன்றி. அது மிகவும் அருமையாயுள்ளது. எத்தனை பேர் சிறு பிள்ளைகளை நேசிக்கிறீர்கள்? நீங்கள் சிறு பிள்ளைகளை நேசிக்கவில்லையென்றால், அப்பொழுது உங்களிடத்தில் தவறான ஒரு காரியம் உள்ளது, ஏதோ ஒரு காரியம் தவறாய் உள்ளது. 243 இப்பொழுது, இன்றிரவு, இப்பொழுது மற்ற ஆராதனைகளுக்குள்ளாக செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம்…இன்றிரவு நான் அதைச் செய்ய வேண்டிய காரணம் என்னவெனில்…நாம் வழக்கமாக இந்த நாட்களில் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தும்போது, நான் கிட்டத்தட்ட ஒரே ஒரு நாள் மாத்திரமே நடத்துவேன், ஏனென்றால் அது எனக்கு அப்பேர்பட்ட ஒரு நடுக்கத்தை அளிக்கிறது. நீங்கள் அதை ஒருபோதும் அறிந்திருக்கமாட்டீர்கள். மற்ற எந்த இடத்திலும் நடத்துவதைப் பார்க்கிலும், என்னுடைய சொந்த இடத்தில் நடத்துவது இருமடங்கு நடுக்கமாய் உள்ளது. 244 நான் இந்தக் காலையில் அதனோடு செய்த அப்பேர்ப்பட்ட ஒரு பெரும் பிழைக்காக நான் மன்னிப்புக் கோரிக்கொண்டிருந்தேன். ஆனால் பில்லி ஜெப அட்டைகளைக் கொடுப்பதற்கு போதிய ஜனங்களை தான் கண்டறியமுடியவில்லை என்று என்னிடத்தில் கூறினதே என்னை வருத்தமடையச் செய்த முதல் காரியமாயிருந்தது. அவனால் ஏறக்குறைய பன்னிரென்டு அல்லது பதினான்கு பேர்களுக்கு மாத்திரமே கொடுக்க முடிந்தது. அவன் ஒரு…எவருக்குமே ஜெப அட்டைகள் தேவைப்படவில்லை. எனவே எல்லாருமே சுகமாயிருந்தனர் என்றே நான் யூகிக்கிறேன். ஆகையால் அதன்பின்னர், அதன் மூலம் நான் ஒருபோதும்…எண்ணவில்லை…எனவே அப்பொழுது நான் அந்த ஜெப அட்டைகளைக் கூப்பிடத் துவங்கும்போது, நான் மொத்தம் பத்து அல்லது பன்னிரெண்டு அல்லது இங்கே எத்தனைபேர் இருக்கிறார்களோ அவர்களை மாத்திரமே கூப்பிடுவேன் என்று நான் எண்ணிக்கொண்டேன். எனவே நான் அவர்களை மேலே அழைத்தேன். அப்பொழுது நான் வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட எண்ணை, ஏதோ ஒன்றை, நான் கூப்பிடவில்லை. நான் கூப்பிட்டேன். ஆனால் அதற்கு பதில் வரவில்லை. திருமதி. உட்ஸ் என்னை அழைக்கும் வரையில் நான் அதைக் குறித்து ஒருபோதும் எண்ணிப்பார்க்கவேயில்லை. அப்பொழுது அவள், “சகோதரன் பிரான்ஹாம், பில்லி அந்த அட்டைகளை எடுத்து, அந்த எண்களை மாற்றி கலந்து, அதன்பின்னரே அவைகளை வெளியே கொடுக்கிறார். எனவே அவர் அந்த எண் மூன்றை வைத்திருக்கலாம்,” (அது தானே?) “எண் மூன்று அவருடைய சட்டைப்பையில் இருந்திருக்கலாம்” என்று கூறினாள். 245 நிச்சயமாகவே, அவன் வழக்கமாக ஐம்பது வரை கொடுக்கிறான். அவன் அவைகளை ஜனங்களுக்கு முன்பாகக் கொண்டு வரும்போது, அவன் அவைகளை அப்படியே எண்களை மாற்றிக் கலந்துவிடுகிறான். ஆகையால் ஒவ்வொருவரும்…எவரும், “எனக்கு எண் ஒன்று கொடுங்கள்” என்று கூற முடியாது. இல்லையென்றால் நாங்கள் எண் ஒன்றிலிருந்து துவங்காமலிருக்கலாம். நாங்கள் ஐம்பதிலிருந்து துவங்கலாம், உங்களுக்குத் தெரியாது, பின்னால் உள்ள எண்ணிலிருந்து துவங்கலாம். நாங்கள் எண் எட்டிலிருந்து துவங்கி மேற்கொண்டு செல்லலாம். இருபதிலிருந்து துவங்கி, மேற்கொண்டு செல்லலாம். நாங்கள் அறியோம். ஆனால் அவன் ஜனங்களுக்கு அவைகள் தேவைப்படும்போது, அவைகளை அப்படியே ஒன்றோடொன்று கலந்து, அவைகளை அவர்களுக்குத் தருகிறான். இந்தக் காலையில் நினைக்காமலேயே நான் நான்கு அல்லது ஐந்துக்கும் அதிகமானதை அழைத்திருக்கலாம், அப்பொழுது அவர்கள் அங்கில்லாமலிருந்திருக்கலாம், ஏனென்றால் அது இருபதுகளில் அல்லது முப்பதுகளில் எங்காவது இருந்திருக்கலாம், நீங்கள் பாருங்கள். அதன்பின்னர், ஆனால் கர்த்தர் அதை கிரியை செய்தார், ஆனால் அது தூரமாக மற்ற இடத்தில் நடத்தும் கூட்டங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தைப் போல, இது உண்மையிலே இங்கு ஏற்படுத்துகிறதாயில்லை. நான் அதை ஒருபோதும் முயற்ச்சிக்காமலிருக்கலாம், அதை மீண்டும் முயற்சிக்காமலிருக்கலாம். 246 ஆனால் அண்மையில் நான் கர்த்தரிடத்தில் கேட்டுக்கொண்டதென்னவென்றால், அவர் நமக்கு ஒரு நல்ல கூட்டத்தைத் தருவாரானால், அப்பொழுது நான் அவரிடத்தில் அதற்கு மேல் ஒன்றையுமே கேட்கமாட்டான் என்று நான் வாக்களித்தேன், ஏனென்றால் அது அப்பேர்பட்ட ஒரு கடினமான காரியமாய் இருந்துவருகிறது. அது வேதத்திற்கு எதிரானதாயுள்ளது. புரிகிறதா? நீங்கள்…அதுதான் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அது எனக்கு ஆரம்பத்திலேயே ஒரு தோல்வியைத் தருகிறது என்பதை அறிந்திருக்கிறேன். புரிகிறதா? நான் துவக்கத்திலேயே தோற்கடிக்கப்படுகிறேன். 247 ஆனபோதிலும் யாரோ ஒருவர் இந்த பிற்பகல் வேறு யாரோ ஒருவரை அழைத்தார். திருமதி. உட்ஸ் அவர்கள் யாரோ ஒருவரால் அழைக்கப்பட்டார். அதாவது, “சபையில் உள்ள யாரோ ஒருவர் இந்தக் காலை அழைக்கப்பட்டார், அது இந்தப் பிற்பகல் கிறிஸ்துவினிடத்திற்கு வந்திருந்த மிக, மிக சுகவீனமாயிருந்த ஒரு மனிதனைக் குறித்தே” என்று பின்னர் கூறப்பட்டது. கிறிஸ்துவினிடத்திற்கு வந்த அந்த மனிதன் மிகவும் சுகவீனமாயிருந்தார். 248 மற்றொரு காரியம், நான் திருமதி. உட்ஸ் அவர்களுடைய சகோதரியினிடத்தில், வயோதிக சகோதரினியிடத்தில் பேசினேன் என்றும், நான் அன்றொரு நாள் கெண்டக்கியில் உள்ள அவளுடைய வீட்டில் உண்மையாகவே இருந்து, அவளோடு பகல் உணவு இல்லை அவளோடு இரவு உணவு உண்டேன் என்றும் திருமதி.உட்ஸ் என்னிடத்தில் கூறினாள். நான் அந்த ஸ்திரீயை அடையாளங் கண்டுகொள்ளவில்லை என்பதை சர்வ வல்லமையுள்ள தேவன் அறிந்திருக்கிறார். பார்த்தீர்களா? அது உண்மை. சரியாக…தரிசனங்கள் தேவனைச் சார்ந்தவைகளாயிருக்கின்றன. அவைகள் எப்படி நடைபெறப் போகிறது அல்லது என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை நாம் ஒருபோதும் அறியோம். என்ன சம்பவிக்கப்போகிறது என்பது தேவனைப் பொறுத்ததாயுள்ளது. ஆனால் நான் செய்ய அறிந்துள்ளதோ அவைகளுக்காக அங்கே காத்திருப்பதேயாகும். 249 அன்றொருநாள் இந்த சிறிய பெண் இங்கிருந்தபோது, பகுத்தறிந்து கூற வேண்டியதாயிருந்தது, நான்…இல்லை…பாருங்கள், தேவன் அதை உலகம் முழுவதற்கு தருவாரானால், அது அருமையாயிருக்கும்; ஆனால் அது அவ்வாறு இருந்திருந்தால், அப்பொழுது சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இங்கே தெருவின் குறுக்கில் என்னிடத்தில் கூறியிருந்ததற்கு அது முரணானதாயிருக்கும். அது சரியாயிருந்து என்பதை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும், இங்குள்ள சபை அதைக் காணட்டும். ஆகையால் நான் அந்த திருமதி. ஸ்னைடர் அவர்களை அழைத்தேன். சகோதரி.ஸ்னைடர். அவள் இங்கே எங்கோ இருக்கிறாள். அவளுக்கு காது கேட்பது சற்று கடினமாயுள்ளது. அப்பொழுது அந்த சிறு பெண்மணி, “உங்களுக்கு கீல்வாதம் உள்ளது” இல்லை மூட்டு வீக்கம், அதைப் போன்ற ஏதோ ஒன்று உள்ளது என்று அதை மெல்லிய சத்தத்தில் கூறினாள். 250 அது ஒரு உடைந்த இடுப்பு என்பதை நான் அறிந்திருந்தேன். ஆகையால்…அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் அதை இந்தக் காலையில் வெளிப்படுத்தினார். புரிகிறதா? 251 இப்பொழுது அது என்னவாயிருக்கிறதென்றால், அது ஒரு தெய்வீக வரமாய் உள்ளது, அது அதனுடைய இராஜாதிபத்தியத்தில் கிரியை செய்கிறது. ஆனால் உண்மையில் இங்கே இந்தப் பட்டிணத்தில் அதை மிகவும் கடினமாக்குகிறது எதுவென்றால், நான்—நான் இங்கே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிற எல்லா நேரத்திலும் சிக்கலடைகிறேன். இல்லையென்றால் — இல்லை…நான் சென்று ஜனங்களுக்கு இதைக் கூறுவேன். நான் சென்று, “இப்பொழுது கர்த்தர் உங்களை குணப்படுத்தியிருக்கிறார். இயேசு ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உங்களுக்காக மரித்த போது, அவர் உங்களை குணப்படுத்திவிட்டார். அப்பொழுதே நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். இப்பொழுது தேவனைப் பொருத்தமட்டில், கிறிஸ்துவைப் பொருத்தமட்டில், ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். உங்களுடைய வியாதி போய்விட்டது. அதைக் கிரியைச் செய்ய உங்களுடைய விசுவாசம் அதற்கு தேவைப்படுத்துகிறது” என்று கூறுவேன். 252 அதன்பின்னர் அந்த நபரால் சென்று ஏறத்தாழ சுகத்தைப்பெற முடியவில்லை. அப்பொழுது அந்த நபர் திரும்பவும் வந்து, “சகோதரன் பிரான்ஹாம் நான் குணமடைந்துவிட்டதாக என்னிடத்தில் கூறினார்,” என்று கூறுகிறார். புரிகிறதா? தேவன் என்னக் கூறினார் என்பதையே நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். 253 இப்பொழுது, அது ஒரு நபரிடத்தில் நேரடியாக, நேரடியாக, “இது கர்த்தர் உரைக்கிறதாவது,” ஒரு குறிப்பிட்டக் காரியம் சம்பவிக்கப்போகிறது என்று உரைக்கப்படும்போது, உங்களுடைய சுகமளித்தல் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதை அது உங்களுக்கு அங்கேயே நிரூபிக்கும். உங்களுடைய விசுவாசம் அதை முத்திரையிட்டிருக்கிறது. புரிகிறதா? வாக்குத்தத்தம் உங்களுடையதாயிருக்கிறது. அது என்னுடைய வார்த்தை அல்ல. நீங்கள் ஏற்கெனவே சுகமடைந்துவிட்டீர்கள் என்பது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. புரிகிறதா? ஆனால் நீங்கள் அப்படியே…எப்படியும் மற்றவருக்கு, என்னால்—என்னால் அதை இங்கே ஜெபர்ஸன்வில்லில் உள்ள சபையோருக்கு மனதில் பதியச் செய்ய முடியாது. என்னால்—என்னால் அதை சம்பவிக்கச் செய்ய முடியாது. எனக்குத் தெரியும். நான் முடிந்தளவு அதை விளக்கிக் கூற முயல்வேன், அதைச்—அதைச் சம்பவிக்கச் செய்ய முடியாது. அவ்வளவுதான். நான் கூறுவதோ… 254 இங்கே அண்மையில், நான் ஒரு மனிதனிடத்திற்கு, மரித்துக்கொண்டிருந்த மனிதனுடைய வீட்டிற்குச் சென்றேன். அவர்கள், “அவனுக்காக ஜெபிக்க வாருங்கள். அவன் காலை வரையிலுமே உயிர் வாழமாட்டான் என்று மருத்துவர் கூறிவிட்டார்” என்று கூறி என்னை அழைத்தனர். 255 நான் உள்ளே சென்றேன். அந்த வாலிப மனிதன் என்னிடத்தில், “திரு.பிரான்ஹாம் அவர்களே, நான் மரிக்க விரும்பவில்லை” என்று கூறினான். ஏன்? நிச்சயமாகவே அந்த வாலிப மனிதன் மரிக்க விரும்பவில்லை. அவன் அங்கே இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை உடையவனாயிருந்தான். 256 எனவே நான் அங்கு சென்றேன். அப்பொழுது நான், “இப்பொழுது, பார், உன்னுடைய மருத்துவர் யார்?” என்று கேட்டேன். அவன் அதை என்னிடத்தில் கூறினான். அப்பொழுது நான், “இப்பொழுது, நீ மரிக்கப் போகிறாய் என்பதை மருத்துவர் ஒருக்கால் கூறியிருக்கலாம், ஆனால் அதே சமயத்தில் நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்று தேவன் உரைத்திருக்கவில்லை” என்று கூறினேன். மேலும் நான், “இப்பொழுது, வேதாகமத்தின்படி, நீங்கள் ஏற்கெனவே குணமடைந்துவிட்டீர்கள், ஏனென்றால் இயேசுவானவர் உங்களுடைய சுகமளித்தலுக்காக மரித்தார்.” என்றேன். 257 அப்பொழுது அவர், “நான் குணமடைவேன் என்று நீர் விசுவாசிக்கிறீரா?” என்று கேட்டார். 258 அதற்கு நான், “நான் அதை முற்றிலுமாக விசுவாசிக்கிறேன்” என்று கூறினேன். 259 நான் ஒரு மனிதனுக்காக ஜெபிக்கச் சென்றிருந்து, அந்த மனிதன் தனக்காக விசுவாசிக்கும்படியான அந்த விதமான விசுவாசத்தை உபயோக்கிக்காமல் இருந்தால், அப்பொழுது நான் போய், “ஓ, இல்லை, இல்லை, நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்று, நீங்கள் மரித்துவிடப் போகிறீர்கள் என்று மருத்துவர் கூறியிருந்தால், அதுவே இப்பொழுது இதற்கு முடிவாகிறது” என்று கூறினால் எப்படியிருக்கும்? அந்த மாதிரியான ஒரு நபர் வியாதியஸ்தருக்காக வந்து ஜெபிக்க விரும்பப்படமாட்டாரல்லவா? அந்த நபர் என்னுடைய வீட்டில் எனக்காக ஜெபிக்க நான் விரும்பமாட்டேன். அவர் யாராயிருந்தாலும், அவர் அதைக் கண்டிருந்தாலும் அல்லது காணமலிருந்தாலும், அவர் விசுவாசத்தைப் பற்றிக் கொண்டு, எனக்காக வாக்குத்தத்தத்தின் மேல் நிற்க விரும்புகிறவரையே நான் ஜெபிக்கும்படிக்கு விரும்புவேன். அது உண்மை. நான் கூறினேன்…அவர்… 260 நாங்கள் சென்று ஜெபத்தை ஏறெடுத்தோம். அப்பொழுது நான், “இப்பொழுது திடன் கொள்ளுங்கள்” என்றேன். 261 அதற்கு அவர், “நான் சுகமடைவேன் என்று நீர் பொருட்படுத்திக் கூறுகிறீரா?” என்று கேட்டார். 262 அப்பொழுது நான், “ஏன்? நிச்சயமாக, நீர் சுகமடைவீர் என்று தேவனுடைய வார்த்தை உரைத்தது. பாருங்கள், ‘நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும்’” என்றேன். 263 அப்பொழுது அவர், “சரி, நான் அதை விசுவாசிப்பேன்” என்றார். பின்னர் புறப்பட்டுச் சென்று, தன்னுடைய மனைவியினிடத்தில் அதைக் கூறினார். 264 மருத்துவரோ, “அந்த மனிதன் மரித்துக்கொண்டிருக்கிறான், அவன் மரித்துக்கொண்டிருக்கவில்லையா?” என்றார். 265 மேலும், “ஆம், அவன் மரித்துக் கொண்டிருக்கிறான்” என்றே கூறினார். எனவே அதற்கு அடுத்த நாள் இல்லை அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அந்த மனிதன் மரித்துப் போய்விட்டான். 266 அதன்பின்னர் இந்த ஸ்திரீ வெளியே போய் மது அருந்தத் தொடங்கி தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது இந்த சபையின் உதவிக்காரர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன், அவர் அந்த ஸ்தீரியினிடத்திற்குச் சென்று, அவள் மீண்டும் சபைக்கு திரும்ப வரும்படிக்கு அவளிடத்தில் கேட்டுக்கொண்டார். அதற்கு அவளோ, “நான் யாரையுமே நம்பமாட்டேன், பிரசங்கியார் பிரான்ஹாம் இங்கே வந்து, என்னுடைய கணவனுக்காக ஜெபித்து, அவர் உயிரோடிருக்கப்போவதாகக் கூறினார். ஆனால் அவர் அதற்கு இரண்டு இல்லை மூன்று நாட்கள் கழித்து மரித்துப் போய்விட்டார்” என்று கூறினாள். மேலும், “நான் நம்பவேமாட்டேன்” என்றும் கூறினாள். இப்பொழுது அவள் மரித்து கொண்டிருக்கிறாள். சரி. 267 ஆனால், எப்படியாயினும், நீங்கள் பாருங்கள், நீங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு ஜனங்கள் கவனம் செலுத்துகிறதில்லை என்பதையே அது காண்பிக்கிறது. புரிகிறதா? நிச்சயமாக. நான் ஒரு நபருக்காக ஜெபித்திருந்தால், நான்—நான் அந்த ஜனங்கள் உயிரோடிருக்கப் போகிறார்கள் என்று அவர்களிடத்தில் நான் கூறினால், அப்பொழுது அவர்கள் உயிரோடிருக்கப் போகிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் என்னுடைய வார்த்தை கர்த்தர் உரைக்கிறதாவது என்று முற்றிலுமானதாய் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அதை அவிசுவாசித்தால், நீங்கள் எப்படியும் மரித்துப் போவீர்கள். நிச்சயமாக. இதோ கர்த்தர் உரைக்கிறதாவது என்பது உள்ளது. ஜனங்களில் அநேகர் அதைப் பெற்று, மரித்துப்போகிறார்கள். ஜனங்களில் அநேகர் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைப் பெற்று நரகத்திற்குப் போகிறார்கள், நீங்கள் அதற்கு அதைப் பெற்றுக்கொள்ள வேண்டாம். அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. புரிகிறதா? அது என்னவென்றால்…அவையாவும் உங்களுடைய விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 268 சகோதரன் காலின்ஸ், அவர் இன்றிரவு இங்கில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இன்று காலையில் அவர் கூறினதைக் கேட்டுக்கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் அதன் பேரிலான மிக தீரமான உரையை நிகழ்த்தினார். பார்த்தீர்களா? புரிகிறதா? அவர் பிரசங்கித்தார். அவர், “இப்பொழுது, நீங்கள் இங்கே பெற்றிருக்கிற அதே விசுவாசத்தோடு, நீங்கள் அங்கே வெளியேற வேண்டியவர்களாய் இருக்கப் போகிறீர்கள். ஏனென்றால் அது உங்களுடைய ஸ்தாபனத்தில் உள்ள உங்களுடைய தனிப்பட்ட விசுவாசமாயிராமல், கிறிஸ்துவில் உள்ள விசுவாசமாய் உள்ளது. நீங்கள் அந்த விசுவாசத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும்” என்றார். அது முற்றிலும் உண்மை. முற்றிலுமாக. 269 தெய்வீக சுகமளித்தல் உங்களுடைய விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால், “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்று கர்த்தர் உரைக்கிறதாவது என்ற தேவனுடைய வார்த்தையின்படி, இயேசுவானவர் கல்வாரியில் மரித்தபோதே, ஒவ்வொரு நபரும் குணமாக்கப்பட்டு விட்டனர். அது சரியா? நாம் குணமானோம். வேதம், “நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள்” என்று கூறிவிட்டது. ஆகையால் என்னிடத்தில் குற்றம் கண்டுபிடிக்காதீர்கள், நான் ஒரு வார்த்தையின் பிரசங்கியாராயிருக்கிறேன். எனவே தேவன் ஏதோ ஒரு காரியத்தை தவறாகக் கூறிவிட்டார் என்று அவரிடத்தில் போய் சொல்லுங்கள். அப்பொழுது உங்களுடைய பலவீனம் எங்கே உள்ளது என்று தேவன் உங்களுக்குச் சொல்லுவார். புரிகிறதா? ஆகையால் அது உங்களுடைய விசுவாசமாயுள்ளது. இயேசு, “நீ விசுவாசிக்கக் கூடுமானால், நீ விசுவாசிக்கக் கூடுமானால்” என்றார். 270 இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய விசுவாசத்தை உறுதிசெய்து, அதை திடப்படுத்தி, “கர்த்தர் உரைக்கிறதாவது, ‘நாளை இந்தக் குறிப்பிட்ட நேரத்தில், நீ ஒரு குறிப்பிட்டக் காரியத்தைப் பெற்றுக்கொள்வாய் என்றும், குறிப்பிட்டக் காரியம் சம்பவிக்கும். அது இங்கே ஒரு குறிப்பிட்ட வழியில் முடிவுறும், நீங்கள் இங்கே ஒரு குறிப்பிட்டக் காரியத்தைச் சந்தீப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்’” என்று கூறியுள்ளதை நீங்கள் கேட்கும்போது, இப்பொழுது, நீங்கள் அதைக் கவனித்துப் பாருங்கள். அது இப்பொழுது இங்கே சரியாக ஒரு முடிவுபெற்ற கிரியையாய் உள்ளது. 271 ஆனால் அது தெய்வீக சுகமளித்தலைக் கூறும்படிக்கு வரும்போது, நான் அதே அடிப்படையின் பேரில், அந்த பாணியிலேயே, இரட்சிப்பைப் போன்றே தெய்வீக சுகமளித்தலையும் எடுத்துரைக்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் என்ன செய்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, இயேசுவானவர் மரித்தபோதே நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள், ஏனென்றால் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கவே அவர் மரித்தார். ஆனால் நீங்கள் அதைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அந்த அனுபத்தை பெற்றுக்கொள்ளும் வரையில் அது உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையையுமே செய்யாது. ஆனால் உங்களுடையப் பாவங்களை பொறுத்தமட்டில், அவைகள் ஏற்கெனவே மன்னிக்கப்பட்டிருக்கின்றன. அது உண்மை. அவர்… “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” புரிகிறதா? அங்குதான் காரியமே உள்ளது. இப்பொழுது அதை நினைவில் கொள்ளுங்கள். 272 இப்பொழுது, அது உபதேசத்திலும், வேதவாக்கியங்களிலும் உள்ளதை நான் அறிவேன். நாம் ஒரு கலப்படமான சபையாயிருக்கிறோம். அநேக சமயங்களில், இந்த எபிரெய புத்தகத்தில், சரியாகக் கூறினால், இது ஒரு ஆழமான புத்தகமாயுள்ளது…நான் இப்பொழுது கொஞ்ச நேரம் அதை விட்டுச் செல்லப் போகிறேன். நான் இன்றிரவு 7-வது அதிகாரத்தின் கடைசி பாகத்தை முடித்துவிட முயற்சிக்கப் போகிறேன். 273 இப்பொழுது உங்களுடைய சிந்தையில் அநேக கேள்விகள் உள்ளன என்பதில் சந்தேகமேயில்லை. உங்களில் அநேகருக்கு கேள்விகள் உள்ளன, எனக்கும் கூட உண்டு. இப்பொழுது அடுத்த முறை, கர்த்தருக்குச் சித்தமானால், நான் வரும்போது… 274 நான் இப்பொழுது மிக்சிகனுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அதன்பின்னர் மிக்சிகனிலிருந்து நான் கொலொடோராவிற்குப் போகிறேன். பின்னர் கொலொடோராவிலிருந்து மேற்குக் கரைக்குச் செல்கிறேன். இப்பொழுது—இப்பொழுது, நாங்கள் வரும்போது, கர்த்தருக்குச் சித்தமானால்…இப்பொழுது, எனக்குத் தெரியாது. ஞாயிற்று கிழமை நான் சிக்காகோவிற்கு செல்லாமலிருந்தால், அப்பொழுது நான் ஒரு கால் வருகின்ற ஞாயிறு இரவு இங்கே திரும்பி வருவேன். 275 இப்பொழுது நாம் இங்கே இந்த புத்தகத்தினூடாக, இவைகள்—இவைகள் இவை யாவற்றினூடாகவும் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக நம்முடைய மேய்ப்பரை பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கிக்கவிடாமல் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா? இப்பொழுது நாம்…நான் அதைச் செய்ய விரும்புகிறதில்லை. சகோதரன் நெவில் அவர்கள் ஒரு அருமையான, இனிமையான, அன்பான சகோதரன். இந்த சபையானது சகோதரன் நெவில் அவர்களை நேசிக்கிறது என்று நான் நிச்சயம் நம்புகிறேன். 276 இதற்கிடையில் நான் பேசிக்கொண்டிருக்கையில், இந்த தேசத்தில் எங்கோ உள்ள யாரோ ஒருவர் சகோதரன் நெவில் அவர்களை இந்தப் பிரசங்கபீடத்திலிருந்து நீக்கிவிடும்படி சில அஞ்சல் அட்டைகளை எழுதியுள்ள குற்றவாளியாயிருக்கிறார். நீங்கள் அதை என்னோடு தெளிவாக முடிவு செய்து கொள்ளப் போகிறீர்கள். உ-ஊ. அது உண்மை. ஊ — ஊ. ஆம் உண்மையாகவே. இப்பொழுது நான் உங்களிடத்தில்…உதவிக்காரரின் குழுவினைக் குறித்த ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். உதவிக்காரரின் குழுவிற்கு அந்த போதகரோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது; இல்லை ஐயா. சபை முழு அதிகாரத்தை உடையதாயிருக்கிறது. அது இல்லை…ஒரு உதவிக்காரரின் குழுவானது இந்த சபையில் இங்கே ஒழுங்கு முறையை முதலியவற்றை காத்துக்கொள்ளும்படியான காவற்காரராய் உள்ளது. ஆனால் அது நடைமுறை ஒழுங்கினை செயல்படுத்துகிறபோது, அப்பொழுது முழு சபையையும் அவ்வண்ணமாக கூற வேண்டும். இந்த சபையானது சபைக்குள்ளான தலைமையுரிமையின் பேரில் கட்டப்பட்டுள்ளது. ஆகையால் நான் இந்த போதகரை நீக்குவதிலோ அல்லது வேறு ஒருவரை உள்ளேக் கொண்டு வருவதிலோ கூறுவதற்கு ஒன்றுமேயில்லை. நான் சபையின் சொத்தை சொந்தமாக வைத்திருக்கிறேன்; அது சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் யாவரும் சபையாயிருக்கிறீர்கள். ஜனங்களாகிய நீங்கள் தான் அதை கட்டுப்படுத்தும் ஆற்றலை உடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்களே தான் சபையாயிருக்கிறீர்கள். சபையானது, தேவனுடைய பரிசுத்த சபையானது, அந்த சபையில் பரிசுத்த ஆவியினுடைய இராஜாதிபத்தியத்தைக் கொண்டுள்ளது. நான் செய்கிற ஒரே காரியம் என்னவென்றால், நான் இந்த சபையில் கொண்டுள்ள சொத்தும் சபைக்காக கொடுக்கப்படுகின்றபடியால் அதை சபைக்கே அளித்துவிடுகிறேன். அதற்கு வரி கிடையாது. சபையானது தங்களுக்கு சொந்தமான போதகரை தேர்ந்தெடுக்கிறது. எனக்கு அதனோடு எவ்வித சம்மந்தமும் கிடையாது. இந்த போதகர் எப்போதாவது இந்த சபையை விட்டுச் செல்லக் கூடுமானால், போதகர் தானாகவே சபையை விட்டுச் செல்லத் தீர்மானித்தால், அல்லது சபையின் பெரும்பான்மையான வாக்குகள் “போதகரை மாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தால் மாத்திரமே அதைச் செய்யலாம். அந்த ஒரே வழியில் தான் அதைச் செய்யலாம். எந்த உதவிக்காரரின் குழுவும் அதைச் செய்ய முடியாது. உதவிக்காரரின் குழு சபையில் ஒழுங்கு முறைகளையும் மற்றக் காரியங்களையும் மாத்திரமே நிர்வகிக்கிறது. 277 தருமகர்த்தாக்களுக்கும், அவர்களுக்கும் இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது, சபையைப் பழுதுபார்ப்பது மாத்திரமே அவர்களுடைய பணியாகும். முழு தருமகர்த்தா குழுவும் ஒன்று சேர்ந்து கூடி, “நாம் இதைக் கட்டுவோம் அல்லது நாம் அதைக் கட்டுவோம்” என்று கூறும் வரை…அவர்களும் அதைச் செய்ய முடியாது. அப்பொழுதும் பொருளாளர் அதைச் செய்ய பணம் வைத்திருக்கிறாரா என்று அவர்கள் பொருளாளரைக் கேட்க வேண்டும், ஆம் ஐயா. 278 ஆனால் எந்த உறுப்பினருக்கு எதிராவது ஏதாவது புகார் இருந்தால், ஒரு உறுப்பினர் மற்றொருவருக்கு எதிரான ஒரு புகாரை உடையவராயிருந்தால், அல்லது தவறான ஏதோ ஒரு காரியத்தை உடையவராயிருந்தால், அப்பொழுது நீங்களே அந்த சகோதரனிடத்திற்குச் சென்று, நீங்களும் அவரும் தனியாக இருக்கும்போது அதைக் குறித்து அவரிடத்தில் பேச வேண்டும். அப்பொழுது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அதன்பின்னர் நடக்க வேண்டிய அடுத்த காரியம், நீங்கள் உதவிக்கரர்களில் ஒருவரை அல்லது வேறு யாரோ ஒருவரை உங்களோடு அந்த சகோதரனிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன் பின்னரும் அவர் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் வந்து அதை சபைக்குச் சொல்லுங்கள். அதன்பின்னர் சபையானது…அப்பொழுது அவன் சபையையும் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அப்பொழுது வேதம், “அவன் ஒரு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக” என்று உரைத்துள்ளது. அது உண்மையே. 279 ஒரு நபர் குற்றவாளி என்பதை அறிந்திருக்கிற நீங்கள் எந்த நபரானாலும், நீங்கள் அவர்களிடத்திற்குப் போய் பேசவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் தேவனுடைய சபையின் பாகமாயிருக்கிறபடியால், அந்தப் பாவத்திற்காகப் பதில் கூறப் போகிறீர்கள். அது உண்மை. 280 எந்த நபராவது ஒரு உதவிக்காரருக்கு விரோதமான ஒரு—ஒரு புகாரை உடையவராயிருந்தால், உதவிக்காரருக்கு எதிராகவோ அல்லது சபையில் உள்ள யாரோ ஒருவருக்கு எதிரான புகாரை உடையவராயிருந்தால் அதற்கு மூன்று பேர் தேவையாயிருக்கிறது. எனவே மூன்று பேர் வந்து சாட்சியாக இரண்டு அல்லது மூன்று சாட்சிகளைக் கூறவேண்டும், அதாவது ஒரு உதவிக்காரருக்கு எதிரான ஒரு மனத்தாங்கல் உள்ளது என்பதை போதகரிடத்தில் வந்து சொல்ல வேண்டும். ஆகையால் ஒரு உதவிக்காரருக்கு எதிராக ஒரு மனத்தாங்கல் இருந்தால், உதவிக்காரர் வெறுமென ஒரு—ஒரு மனிதனல்ல, ஒரு—ஒரு பரிபூரண மனிதர். அவர் ஒரு உதவிக்காரரின் பணியினை குற்றமற்றவராக தொடர்ந்து செயல்புரிய வேண்டும், அப்பொழுதே அவர் குற்றமற்றவராக கண்டறியப்படுவார். அந்த உதவிக்காரர் அந்தப் பணியியை சரியாக செயலாற்றிக்கொண்டிருக்கவில்லை என்பதை அந்த சபையோர் கண்டால், அப்பொழுது சபையில் உள்ள அந்த நபர் தன்னோடு மூன்று பேரை அழைத்துக் கொண்டு போதகரிடத்திற்குச் செல்ல வேண்டும். அந்த உதவிக்காரர் வீட்டிலே ஒரு இரவு தரித்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார். அதன்பின்னர் போதகர்…வந்து, சபையோர் ஒன்று கூடும்போது அந்த மனத்தாங்கலைக் கூறுவார். அப்பொழுது சபையோர் அந்த உதவிக்காரர் தொடர்ந்து உதவிக்காரராய் இருக்கலாம் என்று வாக்களித்தால், அவர் தொடர்ந்து உதவிக்காரராய் இருக்கலாம். அப்படியில்லாமல் அவர்…சபையோர் அவர் உதவிகாரராயிருப்பதிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வாக்களித்தால், அப்பொழுது அவர்கள் அன்றிரவே ஒரு புதிய உதவிக்காரரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புரிகிறதா? 281 ஆகையால், எந்த ஒரு நபருக்குமே இதில் செய்யும்படியான எந்த ஒரு காரியமும் இல்லை. அது பெரும்பான்மையான ஜனங்களைப் பொறுத்ததாயுள்ளது. ஆம் ஐயா. அவருக்கு ஆதரவாக இருபது வாக்குகள் இருந்து, அவருக்கு எதிராக இருபத்தியொரு வாக்குகள் இருந்தால், அவர் தொடர்ந்து நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலுமிருக்கலாம். புரிகிறதா? அது சபைக்குள்ளான தலைமையுரிமையாயுள்ளது. அப்பொழுது ஒவ்வொரு அங்கத்தினரும் சபையில் அதை அவ்வண்ணமாய் இருக்க ஆமோதிக்க வேண்டும். ஏதாவது காரியம் தவறாக நடைபெறுமாயின், அப்பொழுது அவர்கள் வந்து, தேவனுடைய சபையின் நடவடிக்கையில் எந்தக் காரியமும் முட்டுக்கட்டையாயிராமல், அவைகள் முற்றிலுமாயிருப்பதைக் காண அந்த ஒரு காரியத்தை அவர்கள் தேவனுக்கு முன்பாகச் செய்ய வேண்டும். 282 ஆனால் போதகரே சபையின் முழுமையான, முடிவான அதிகாரத்தை உடையவராயிருக்கிறார். அது வேதாகம முறைமையாயில்லையா என்பதை வேதத்தில் வாசித்துப் பாருங்கள். அது முற்றிலும் உண்மையே. மூப்பருக்கு மேலாக ஒருவரும் இல்லை. சகோதரன் நெவில் இங்கே என்ன செய்கிறார் எனபதோடு எனக்கு எந்த சம்மந்தமும் கிடையாது. அது உங்களையும், சகோதரன் நெவிலையும் பொறுத்ததாயுள்ளது. சகோதரன் நெவில் யேகோவா சாட்சிக்காரரின் உபதேசத்தைப் பிரசங்கிக்க விரும்பினால், அது அவரையும் உங்களையும் பொறுத்ததாயுள்ளது. புரிகிறதா? அவர் விரும்புகிற எந்தக் காரியத்தையாவது அவர் பிரசங்கிக்க வேண்டும் என்று விரும்பினால், அது உங்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள காரியம் ஆகும். அவ்வளவுதான். அவர் அங்கு அதைப் பிரசங்கிக்க சபையோர் வாக்களித்தால், அப்பொழுது அது சரி. அது அவரைப் பொறுத்ததாகும். 283 நான் செய்கிற ஒரேக் காரியம் சொத்தினை அப்படியே சொந்தமாக ஏற்றுக்கொள்கிறேன். வேறு ஏதோ ஒன்று எழும்புமாயின், அதாவது போதகரை நீக்குவது போன்றதாயிருக்குமாயின், அப்பொழுது அவர்கள் அதன் பேரில் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். நீங்கள் அதைச் செய்யும்படி ஒரு உதவிக்காரரை கேட்க முடியாது. ஆனால் நீங்கள் என்னிடத்தில் வந்து கேட்கலாம். அப்பொழுது நான் வந்து, “நீங்கள் போதகரை நீக்க வேண்டுமானால், ஏன் என்று என்னிடத்தில் சொல்லுங்கள். அவர் ஏதாவது காரியத்தை செய்துவிட்டாரா?” என்று கேட்பேன். 284 அப்பொழுது நீங்கள், “ஆம், நாங்கள் அவர் மது அருந்தும்போது பிடித்துவிட்டோம். இல்லையென்றால் நாங்கள் அவர் இதைச் செய்யும்போது அல்லது சரியில்லாத ஒரு காரியத்தைச் செய்யும்போது பிடித்துவிட்டோம்” என்று கூறுவீர்கள். 285 மேலும், “அதற்கு நீங்கள் மூன்று சாட்சிகளை வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்பேன். 286 அப்பொழுது நீங்களோ, “ஆம், நாங்கள் வைத்துள்ளோம்” என்பீர்கள். 287 அப்பொழுது அந்த சாட்சிகள் முதலில் சோதித்தறியப்பட வேண்டும். “மூப்பருக்கு எதிரான இரண்டு அல்லது மூன்று சாட்சிகளும் முதலில் நிரூபிக்கப்பட்டாலொழிய, அந்த மூப்பருக்கு விரோதமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.” அதன் பின்னர் நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றும், நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்று அதை நீரூபிக்க, நீங்கள் அதற்காக ஆணையிட்டுக் கூற வேண்டும். 288 ஆகையால் நீங்கள் அவ்வாறு செய்வீர்களேயானால், அப்பொழுது, “அது தவறு” என்று அந்த பாவமானது வெளிப்படையாக கடிந்து கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், “சபையோரே, நீங்கள் உங்களுடைய போதகரை மாற்ற விரும்புகிறீர்களா?” என்று கேட்க வேண்டும். 289 அப்பொழுது சபையோர், “அவரை மன்னித்து, அவரே இன்னமும் தொடர்ந்து இருக்கட்டும்” என்று வாக்களித்தால், அப்பொழுது அந்த விதமாகவே அது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். புரிகின்றதா? அதுவே ஒரு சபையை தொடர்ந்து நடத்த போதுமான அழகான வழியாயிருக்கிறதல்லவா? அதைத்தான் வேதம் கூறினது. இந்த ஒருவரை உள்ளே கொண்டுவர, அதிகப்படியான அதிகாரத்தைப் பெற்றுள்ள பேராயர்களோ, கண்காணிகளோ மற்றும், குழுக்கள் முதலானோர் நமக்குக் கிடையாது. இங்கே பரிசுத்த ஆவியைத் தவிர அதிகாரம் பெற்றவர் வேறு யாருமே இல்லை. அது உண்மை. அவரே செயல்படச் செய்கிறார். நாம் அவரை பெரும்பான்மையான ஜனங்களைக்கொண்டும், அந்த ஜனங்கள் செல்கிற விதத்தைக் கொண்டுமே அவரை ஏற்றுக்கொள்கிறோம். 290 ஆகையால் ஒரு பக்கத்தினர் இதைச் செய்ய விரும்பினால், மற்றொரு பக்கத்தினர் அதைச் செய்ய விரும்புகிறார்கள், அதில் ஒருபக்கத்தினர் ஜெயங்கொள்ளுகிறார்கள். தோல்வியைத் தழுவுகிற பக்கத்தினர், அவர்கள் அதைக் குறித்து என்ன செய்கின்றனர்? ஜெயங்கொண்டுள்ள மற்றவர்களோடு உடனே சேர்ந்துகொண்டு, “நாங்கள் அப்பொழுது தவறாயிருந்தோம். நாம் இனிமேல் இப்படியே தொடர்ந்து செல்வோம், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரே அந்தத் தேர்வுரிமையைச் செய்துள்ளார்” என்று கூறுவார்கள். புரிகிறதா? அது முற்றிலும் உண்மையே. 291 நாம் ஒரு மக்களாட்சியாக, அமெரிக்கர்களாக நிலைநிற்கும் வரை, ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் நமக்கு ஒரே மாதிரியான ஆதரவளிப்பது போலாகும். ஜனநாயக கட்சிக்காரர்கள் ஆட்சியில் இருந்தால், குடியரசாட்சிக்காரர்கள் அவர்களை செயல்படச் செய்ய ஆதரிக்க வேண்டும். குடியரசாட்சிக்காரர்கள் ஆட்சியானால், மக்களாட்சிக்காரர்கள் ஆதரிக்க வேண்டும். புரிகிறதா? அதுவே நம்மை ஒரு தேசமாக்குகிறது. எப்பொழுது நாம் அதை முறிக்கிறோமோ, அப்பொழுது நாம் நம்முடைய ஜனநாயகத்தை முறித்துப் போடுகிறோம். அது உண்மை. ஜனநாயகக் கட்சியினர், “நான் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது.” ஏனென்றால் குடியரசுக் கட்சியினர் ஆட்சியில் இருந்தனர் என்று கூறினால், அப்பொழுதே நாம் வீழ்ச்சியுறுகிறோம். நான் ஒரு கென்டக்கியன்; நாம் ஒன்று சேர்ந்திருந்தால் நிலைத்திருப்போம்; பிரிவுற்றால் வீழ்ச்சியுறுவோம். 292 இப்பொழுது, சபையில் எந்தக் காரியமாவது தவறாயிருப்பது உங்களுக்கு எப்போதாவது தெரிந்திருந்தால், ஒரு தனிப்பட்ட நபரிடத்தில் அல்லது யாராவது ஒரு நபரிடத்தில் அல்லது எந்தக் காரியமாவது தவறாயிருப்பதை நீங்கள் அறிந்திருந்தால், அப்பொழுது நீங்கள், சபையில் அந்தக் காரியத்தை தெளிவுபடுத்த வில்லையென்றால், அப்பொழுது நீங்கள் தேவனுக்கு முன்பாக பதில் கூற கடமைப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது, இது என்னுடைய தோள்களின் மேல் இல்லை என்பது நினைவிருக்கட்டும். அது உங்களுடைய தோள்களின் மேல் உள்ளது. சபையில் எந்தக் காரியமாவது தவறாயிருந்தால், தேவன் அதற்காக உங்களை பதில் கூறச் செய்வார். அது உண்மை. அந்தவிதமாக அவர் தம்முடைய சபையை தொடர்ந்து செயல்படுத்துகிறார். அந்த விதமாகத்தான் அது வேதத்தில் உள்ளது. அது வேதாகம முறைமையாய் உள்ளது. அதுவே சபைக்குள்ளான இராஜாதிபத்தியமாயுள்ளது. போதகரே தலையாய் இருக்கிறார். அது உண்மை. ஆமென். 293 இப்பொழுது இங்கே இந்த ஆசீர்வதிக்கப்பட்ட, பண்டைய செய்திக்கு வருகிறோம். நீங்கள், இப்பொழுது நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது, இந்த செய்தி ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்பது நினைவிருக்கட்டும். சபையின் ஒலிப்பதிவுகளில் கட்டளைகள் மற்றும் சபையின் ஒழுங்குமுறை விதிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அது வேதகாமத்தின்படியாய் உள்ளது. நாம் அதை செயல்படுத்துகிறதில்லை. தலைமையில் எவருமே இல்லை. இல்லை. எல்லோரும், நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம் ஆனால் நமக்கு ஒரு தலைவர் உண்டு, அது போதகராயுள்ளது, அவர் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும் வரையில் அவரே நமக்குத் தலைவர். உண்மை. சரி. 294 இப்பொழுது, இங்கே இதில் அநேகக் கேள்விகள் இருக்கப் போகின்றன. ஆகையால் அடுத்த முறை…சகோதரன் நெவில் அவர்கள் வானொலி ஒலிபரப்பில் இருக்கும்போது நான் இங்கு இருப்பேன். அப்பொழுது நீங்களும் நானும் ஒன்று சேர்ந்து பரபரப்பாக வாதிடும்படி நீங்கள் உங்களுடைய கேள்விகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எழுதி வைத்துக்கொள்வீர்களா? சரி. 295 பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்பதன்பேரில் நான் போதித்துள்ளேன் என்பதை நான் அறிவேன். நான் இயேசு கிறிஸ்துவின் உயரிய தெய்வீகத் தன்மை என்பதன் பேரில் போதித்துள்ளேன். நான் விசுவாசியின் பாதுகாப்பு, முன்னறிதல், முன்குறித்தல் மற்றும் அதைக் குறித்த அநேகக் காரியங்களின் பேரில் போதித்துள்ளேன். என்னுடைய சபையில் பிரமாணத்தைக் கடைபிடிக்கிறவர்கள் அநேகர் உள்ளனர் என்பதை நான் அறிவேன், அது முற்றிலும் சரியாயிருக்கலாம். முற்றிலுமாக. ஆனால், இப்பொழுது, அந்தக் காரியங்களில், நானும் கூட ஒரு பிரமாணக்காரன், நான் ஒரு கால்வினிஸ்டு. நான் அப்படியே வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான். 296 இப்பொழுது, அவைகளைக் குறித்த சில கேள்விகள் இருக்குமானால், நான் அத்தாட்சிகள் மற்றும் உணர்ச்சிகள் பேரில் போதித்துள்ளேன், அந்த எல்லாக் காரியங்களோடும் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். ஆகையால் வருகின்ற இரவுகளில் ஒன்றில், ஒருகால்…நாம் அதற்கு ஏற்பாடு செய்வோம்… நீங்கள் இங்கே திரும்பி வருவதற்காக விரைந்து செல்ல மிகவும் துரிதப்படுகின்றீர்களா? [சகோதரன் நெவில், “இல்லை” என்கிறார்.—ஆசி.] நாங்கள் புதன் கிழமை இரவு, இந்த வருகின்ற புதன் கிழமை இரவு அதற்காக ஏற்பாடு செய்வோம், ஆகையால் என்னால் அப்பொழுது அதற்கு பதில் அளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். புதன் கிழமை இரவு உங்களுடைய கேள்விகளைக் கொண்டு வந்து, அவைகளை இங்கே மேடையின் மீது வையுங்கள், வேதாகமத்தைக் குறித்த கேள்விகளை, சரி, நான் இப்பொழுது போதித்து வந்துள்ளதன் பேரிலான கேள்விகளைக் கொண்டு வந்து மேடையின் மீது வையுங்கள். புதன் கிழமை இரவு. அதன்பின்னர் வருகின்ற ஞாயிறுக் கிழமை நான் எப்படியும் சிக்காகோவில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் அங்கிருந்து மிக்சினுக்குப் போகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த வகையில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி முயற்சிக்க புதன் கிழமை இரவு நான் இங்கிருப்பேன். இப்பொழுது கர்த்தர் இரக்கமாயிருப்பாராக. இப்பொழுது நாம் அப்படியே ஒரு நிமிடம் நம்முடையத் தலைகளைத் தாழ்த்துவோமாக. 297 இப்பொழுது, ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, இது உம்முடைய மகத்தான ஒழுங்குமுறைத் திட்டமாய் உள்ளது. இது உம்முடைய சபையாய் உள்ளது. கர்த்தாவே, இது நீர் அசைவாடுகிறதாய் உள்ளது, தேவ ஆவியானவர் எங்களை செயல்படத் தூண்டுகிறபடியால் நாங்கள் செயல்பட விரும்புகிறோம். நீர் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம். நாங்கள் இந்த செய்தியை ஒத்திகையாக பார்த்து, இந்த ஆழமான காரியங்களுக்குள் சென்று பார்க்கிறபடியால், எங்களுக்கு தேவையிருக்கிறபடியால், பரிசுத்த ஆவியானவரே அவைகளை எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 298 இப்பொழுது, ஓ, நான்…இந்த எபிரெய புத்தகத்தை, நான் மகத்தான புத்தங்களில் ஒன்று என்றே மதிப்பிடுகிறேன். 299 கொஞ்ச காலம் கழித்து, ஒருக்கால் நான்—நான் அயல் நாடுகளுக்கு…செல்ல வேண்டியிருக்கலாம், தேவன் அனுமதிப்பாரானால், நான் வெகு சீக்கிரத்தில் வெளி நாடுகளுக்குச் செல்வேன். நான் ஒரு தரிசனத்தின்படி ஆப்பிரிக்காவிற்குச் செல்ல வேண்டும். நான் ஆப்பிரிக்காவிற்குச் சென்று, அந்த தரிசனத்தை நிறைவேற்றும் வரையில் என்னுடைய கூட்டங்கள் ஒருபோதும் அதிக அளவில் வெற்றியாய் அமையாது என்றே நான் நினைக்கிறேன். இப்பொழுது, அங்கு செல்வது அநேகமாக இந்த வருகின்ற வசந்த காலத்தில் ஏதோ ஒரு நேரமாய் இருக்கலாம். 300 ஆனால் அந்த நேரத்திற்கு இடையில், நான் எபிரெயரின் புத்தகத்திலிருந்து இன்னும் ஒரு அதிகாரத்தை, அதாவது எபிரெயர் 11-வது அதிகாரத்தை எடுத்துப் பிரசங்கிக்க விரும்புகிறேன். ஏறக்குறைய அந்த 11-ம் அதிகாரத்தில் ஒரு வாரம் தரித்திருந்து, அந்த பண்பியல்புகளில் ஒவ்வொன்றாய் எடுத்து இல்லை அந்த நற்குணங்களைக் கொண்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே எடுத்து, அவர்களுடைய பண்பியல்புகளை விளக்கிக் கூற உள்ளேன். புரிகிறதா? “விசுவாசத்தினாலே, நோவா,” அப்பொழுது நோவாவின் ஜீவியத்தை எடுத்துப் பிரசங்கிப்பேன். “விசுவாசத்தினாலே, ஆபிரகாம்,” அப்பொழுது ஆபிரகாமின் ஜீவியத்தை எடுத்துப் பிரசங்கிப்பேன். “விசுவாசத்தினாலே, ஆபேல்” அப்பொழுது ஆபேலின் ஜீவியத்தை எடுத்துப் பிரசங்கிப்பேன். புரிகிறதா? அதை விளக்கிக் கூறுவேன். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, அந்த விதமாக அதைப் பேசுவேன், அப்பொழுது நாம் முழு வேதாகமத்தையுமே எடுத்துப் பேசப் போகிறோம். ஒருகால் நாம் அதை ஒரு வாரம் அல்லது பத்து நாள் கூட்டங்களில் அதை நடத்த முயற்சிக்கலாம், கர்த்தருக்கு சித்தமானால், கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களினூடாக அல்லது அதைப் போன்ற விடுமுறை நாட்களினூடாக ஒரு கூட்டத்திற்கு பின் மற்றொன்றாக அவைகளை ஒரு எழுப்புதலைப் போன்று நடத்தலாம். 301 இப்பொழுது எபிரெயரின் புத்தகம் 7-ம் அதிகாரத்தில், நாம் இந்த மகத்தான குணாதிசயங்கொண்டவரை சந்திக்கிறோம். அவருடைய பெயர் என்னவாயிருந்தது என்பதை யார் எனக்குச் சொல்ல முடியும்? [சபையார், “மெல்கிசேதேக்கு” என்கின்றனர்.—ஆசி.] மெல்கிசேதேக்கு. இப்பொழுது, இந்த மெல்கிசேதேக்கு யாராயிருந்தார்? அவர் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்தார். அவர் சாலேமின் இராஜாவாயிருந்தார். அது எருசலேமின் இராஜா என்பதாயிருந்தது. அவர் தகப்பனில்லாதவராயிருந்தார், அவர் தாயுமில்லாதவராயிருந்தார். அவருக்கு அவருடைய பிறப்பின் நேரம் இல்லாதிருந்தது. அவர் மரித்துபோகும் ஒரு நேரத்தையும் ஒருபோதும் உடையவராயிருக்கமாட்டார். இப்பொழுது, அது நித்தியமாயிருக்க வேண்டும் என்றே நாம் கண்டறிகிறோம். 302 என்றென்றும் என்னும் வார்த்தை, “ஒரு கால அளவையே” குறிக்கிறது என்பதை நாம் கண்டறிகிறோம். அது உங்களுக்கு இன்னமும் நினைவிருக்கிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஒரு கால அளவு, அது என்றென்றைக்குமாய் என்பதாகும். என்றென்றும் என்பது வேதத்தில் “ஒரு—ஒரு கால அளவு” என்று அநேக முறைகள் சாட்சியிடப்பட்டுள்ளன. 303 ஆனால் நித்தியம், ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு என்பதை நாம் கண்டறிந்தோம். அது சரிதானே? தேவன் மாத்திரமே நித்திய ஜீவனை உடையவராயிருக்கிறார். அது சரிதானே? ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன். ஆகையால் “நித்திய தண்டனை” என்ற அப்படிப்பட்ட ஒரு வார்த்தையேக் கிடையாது. ஏனென்றால் நீங்கள் நித்தியமாக தண்டிக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். நித்தியமாக தண்டிக்கப்பட, நீங்கள் நித்திய…ஜீவனை உடையவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருந்தால், நீங்கள் தண்டிக்கப்பட முடியாது. பாருங்கள். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், அவ்வாறு தண்டிக்கப்பட முடியாது. “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” அது சரிதானே? நித்திய ஜீவன், ஏனென்றால் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருந்தால், நீங்கள் தண்டிக்கப்பட முடியாது, ஏனென்றால் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளீர்கள். ஆகையால் அப்பொழுது நீங்கள் என்றென்றுமாய், என்றென்றுமாய் நரகத்தில் வேதனைப்படப் போவதாயிருந்தால், நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். 304 ஆனால் இப்பொழுது வேதம் சரியாக ஒரு எரிகிற நரகத்தைப் குறித்துப் போதிக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன். வேதம் அதைப் போதிக்கிறது, அதாவது பாவங்களும், பொல்லாங்குகளும் என்றென்றுமாய் தண்டிக்கப்படும், ஆனால் அது நித்தியமாயல்ல. அது ஒருகால் கோடிக்கணக்கான வருடங்களாயிருக்கலாம். அது ஒருகால் கோடானகோடி வருடங்களாய் இருக்கலாம், ஆனால் ஒரு நேரத்தில் அது முற்று பெற வேண்டும். ஏனென்றால் ஒரு துவக்கத்தைக் கொண்டிருந்த எந்தக் காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஒரு துவக்கமேயில்லாதிருக்கிற அந்தக் காரியங்களுக்கு முடிவேயில்லை. 305 அந்தப் பாடம் இப்பொழுது உங்களுக்கு நினைவிருக்கிறதா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நாம் எப்படியாய்த் திரும்பிச் சென்று ஒரு துவக்கதைக் கொண்டிருந்த ஒவ்வொரு காரியமும் தாறுமாறாக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம், பாருங்கள், முதன்மை நிலையிலிருந்து தாறுமாறாகுதல். முடிவிலே அது நித்தியத்திற்கு திரும்பிச் செல்கிறது. அதன்பின்னர் எல்லா நரகமும், எல்லா வேதனையும் எப்பேர்ப்பட்ட ஞாபகத்திறனும் நித்தியத்திற்காக மறைந்து விடும். துவக்கத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு காரியமும் முடிவடைகிறது. 306 இந்த மெல்கிசேதேக்கு இயேசுவாயிருக்கவில்லை, ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். இயேசுவுக்கும் தேவனுக்கும் என்ன வித்தியாசம் உண்டாயிருந்தது, அதாவது இயேசு தேவன் வாசம் செய்த கூடாரமாயிருந்தார். புரிகிறதா? இப்பொழுது, மெல்கிசேதேக்கு, இயேசு தகப்பனையும் தாயையும் உடையவராயிருந்தார். இந்த மெல்கிசேதேக்கு தகப்பனும் தாயுமில்லாதவராயிருந்தார். இயேசு ஜீவனின் ஒரு துவக்கத்தை உடையவராயிருந்தார், அவர் ஜீவனின் முடிவையும் உடையவராயிருந்தார். ஆனால் இந்த மனிதன் தகப்பனும், தாயுமில்லாதவராய், நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமுடையவராயில்லாமலிருந்தார். ஆனால் அது அதே நபராகத்தான் இருந்தது. மெல்கிசேதேக்கும் இயேசுவும் ஒருவரே; ஆனால் இயேசு பூமிக்குரிய சரீரத்தில் பிறந்து பாவமானார். தேவனுடைய சொந்த சரீரம், அவருடைய சொந்த குமாரன் மரணத்தின் கொடுக்கை எடுத்துப்போட, மீட்பின் கிரயம் செலுத்த, தமக்கென்று குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றுக்கொள்ளவே பிறந்து பாவமானார். உங்களுக்கு இது புரிகிறதா? அந்தக் காரணத்தினால்தான் அவர் ஒரு துவக்கத்தை உடையவராயிருந்தார், அவர்—அவர் முடிவையும் உடையவராயிருந்தார். 307 ஆனால் இந்த பரிபூரணமான சரீரம், ஞாபகர்த்தமாக, நம்முடைய உயிர்த்தெழுதலின் அச்சாரமாயிருக்கிறது. அந்த பரிசுத்தமான சரீரம் அழிவைக் காண தேவன் அனுமதிக்க மனதில்லாதிருந்தார், ஏனென்றால் அவரே அதை தமக்கு சிருஷ்டித்தார். அதைப் பிறப்பித்து, அதை உயிரோடெழுப்பி, அதை தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படிச் செய்தார். 308 இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் எழுப்பின அந்த சரீரம் இங்கே சபையில் உள்ளது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அதே அற்புதங்களையும் வல்லமையையும் காண்பிக்கிறது. என்றோ ஒரு நாள் சபையில் உள்ள இந்த பரிசுத்த ஆவியானவர் கூக்குரலிட்டு எழும்பி, பாவிகளாகிய நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கும்படி மகத்துவமான தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிற இந்த சரீரத்தைத் தாமே பெற்றுக்கொள்வார். அதனால் நாம் பாவத்திலிருந்து பரிபூரணமாக விலக்கப்பட்டோம். நாம் பாவ செய்யவில்லை என்பதனால் அல்ல; ஆனால் தேவனுடைய சமூகத்தில் பாவத்திலிருந்து விலக்கப்பட்டோம். காரணம் எனக்கும் தேவனுக்குமிடையே, உங்களுக்கும் தேவனுக்குமிடையே ஒரு இரத்தந்தோய்ந்த பலி நின்று கொண்டிருக்கிறது. அந்தக் காரணத்தினால் அவர், “தேவனால் பிறந்த ஒரு மனிதன் பாவம் செய்யான், அவனால் பாவஞ் செய்ய முடியாது” என்றார். ஏனென்றால் நீங்கள் மீண்டும் பிறந்திருந்தால், அந்த சரீரத்தில் ஜீவித்த அதே பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் ஜீவிக்கிறார். அது பாவம் செய்ய முடியாது; அவருக்கு முன்பாக பலியானது கிடத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை மனப்பூர்வமாய்ச் செய்வீர்களானால், நீங்கள் அந்த சரீரத்திற்குள் இருப்பதென்பது கூடாதக் காரியம் என்பதையே அது காண்பிக்கிறது. ஆமென். அதுவே சுவிசேஷமாய் உள்ளது. அங்குதான் அது உள்ளது. 309 ஆகையால், நீங்கள் பாருங்கள், அது எந்த வேதவாக்கியங்களிலும் முரண்படுகிறதில்லை. அது வேதவாக்கியங்களை ஒன்றாய் கட்டுகிறது. புரிகிறதா? “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டு மறுதலித்துப் போனவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” அங்குதான் நாம் நம்முடைய கேள்விகளைப் புரிந்துகொள்கிறோம்; ஏனென்றால் அப்படியே அவைகளைப் புரிந்துக் கொள்கிறோம், அந்தவிதமாகத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 310 இப்பொழுது கவனியுங்கள். “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு, மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” அவர்களால் அதைச் செய்ய முடியாது. 311 அதன்பின்னர் நீங்கள் எபிரேயர் 10-ம் அதிகாரத்திற்கு செல்லுங்கள், அங்கே அது, “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்ச்செய்கிறவர்களாயிருந்தால்.” பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். 312 பரிசுத்த ஆவியானவர் இந்தக் காலையில் இங்கே செய்த காரியங்களையே மீண்டும் செய்கிறதை நீங்கள் கண்டு, கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்பதையும், அவர் தம்முடைய சபையிலும், தம்முடைய ஜனங்களுக்கு மத்தியிலும் ஜீவித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் கண்டு, வேண்டுமென்றே மனப்பூர்வமாய் அதைப் புறக்கணித்தால், நீங்கள் தேவனண்டை வருவது எப்போதுமே கூடாதக் காரியம், ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியை தூஷித்திருக்கிறீர்கள். 313 இயேசுவானவர் அந்த அற்புதங்களை செய்துகொண்டிருந்தபோது, அவரும் அதேக் காரியங்களைக் கூறினார். 314 அவர்கள், “ஏன்? அவர் பெயல்செபூல். அவர் குறிசொல்லுபவர். அவர் ஒரு பிசாசு” என்று கூறினார். 315 இயேசு சுற்றிப்பார்த்து திரும்பி, “நான் அதற்காக உங்களை மன்னித்துவிடுவேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து அதைச் செய்கிறபோது, அதற்கு விரோதமாக ஒரு வார்த்தைப் பேசினாலும், அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது. ஏனென்றால் நீங்கள் அவருக்குள்ளிருந்த தேவனுடைய ஆவியை ‘ஒரு அசுத்த ஆவி’ என்று அழைத்திருக்கிறீர்கள்” என்றார். 316 ஆகையால் நாம் மனப்பூர்வமாய் பாவம் செய்தால், நாம் பாவம் செய்து, மனப்பூர்வமாய் அவிசுவாசித்தால், நாம் சத்தியத்திய ஏற்று, மீண்டும் பிறந்த பிறகு அல்ல, அப்பொழுது நம்மால் பாவம் செய்ய முடியாது. ஒரு பாவியால் மன்னிக்க முடியாத பாவத்தை செய்ய முடியாது…ஒரு கிறிஸ்தவனால் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்ய முடியாது. அவனால் அதைச் செய்ய முடியாது. அதைச் செய்கிறது தேவபக்தியற்றவர்களாகும். அது பாவனை விசுவாசியேயன்றி, விசுவாசியல்ல. 317 அந்த யூத ரபீகள், ஓ, அவர்கள் ஆசார நுணுக்கம் வாய்ந்தவர்களாயிருந்தனர் என்று அவர்கள் எண்ணினர், அவர்கள் D.D’ மற்றும் ph.D’ பட்டங்களைப் பெற்றிருந்தனர். அவர்கள் எல்லாவற்றையுமே உடையவர்களாயிருந்தனர் என்றே அவர்கள் எண்ணிக்கொண்டனர், ஆனால் அவர்கள் மோசமான பாவிகளாயிருந்தனர். ஓ, அவர்கள்…உங்களால் அவர்கள் மீது கை நீட்டி அவர்களுடைய ஜீவியத்தின் பேரில் குற்றம் சாட்ட முடியாது. அவர்கள் சுத்தமாயும், நன்னடத்தையுள்ளவர்களாயும், நேர்மையானவர்களாயும், அந்தவிதமாக இருந்தனர். ஆனால் அவர்கள் அவிசுவாசிகளாயிருந்தனர். 318 நீங்கள் பாவம் என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதன் பொருள் என்னவென்பதைக் கண்டறியுங்கள். பாவம் என்ற வார்த்தை “அவிசுவாசம்” என்பதையேப் பொருட்படுத்துகிறது. இரண்டு பிரிவுகள் மாத்திரமே உள்ளன, அது ஒரு விசுவாசி அல்லது அவிசுவாசி என்பதாய் உள்ளது. அது ஒரு நீதிமானாக்கப்பட்ட நபர் அல்லது ஒரு பாவி என்பதாய் உள்ளது. அவ்வளவுதான். நீங்கள் ஒரு அவிசுவாசியாயிருந்தால், நீங்கள் ஒரு பாவியாயிருக்கிறீர்கள்; நீங்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும், நீங்கள் எவ்வளவுதான் சபைக்குச் சென்றாலும், அல்லது நீங்கள் ஒரு பிரசங்கியாயிருந்தாலும் கூட அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் இன்னமும் ஒரு அவிசுவாசியாயிருக்கிறீர்கள். 319 அந்த பரிசேயர்கள் பிரசங்கிமார்களாயிருந்தனர், அவர்கள் அவிசுவாசிகளாயிருந்தனர், இன்றைக்கு அதற்காக அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் முடிந்தளவு அவ்வளவு மத ஈடுபாடு கொண்டும், அவ்வளவு பக்தியுள்ளவர்களாயுமிருந்தனர், ஆனால் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அவரை, “ஒரு பிசாசு” என்று அழைத்து, அவருடைய வார்த்தையை விவாதித்தனர். அவர்களில் சிலர், “நீர் இப்பொழுதே சிலுவையிலிருந்து இறங்கி வாரும். ஒரு அற்புதத்தை நிகழ்த்தும். நீர் அதைச் செய்ய நாங்கள் காண்போமாக” என்றனர். ஒருவன் அவரை ஒரு கோலினால் அவருடைய தலையின்மேல் அடித்து, “உம்மை அடித்தது யார் என்று எங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லும், அப்பொழுது நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நாங்கள் உம்மை விசுவாசிப்போம்” என்றான். பாருங்கள், அவிசுவாசிகள்! அவர்கள் விசுவாசிகளாயிருந்தனர் என்று அவர்கள் பாவனை செய்தனர், ஆனால் அவர்கள் பரிசுத்தமும், பக்தியுள்ளவர்களாயிருந்தபோதிலும், அவர்கள் அவிசுவாசிகளாய், உயிர்ப்பிக்கப்படாதவர்களாய், பிரிக்கப்பட்டவர்களாயிருந்தனர். 320 இன்னமும் அதேக் காரியமே இன்றைக்கும் நடை முறையிலிருக்கிறது. புருஷரும் ஸ்திரீகளும் சபைக்குச் சென்று, சோர்வுற்ற முகத்தோடு இருக்கக் கூடும், அவர்கள் தங்களால் முடிந்தளவு பக்தியுள்ளவர்களாய், ஒருபோதும் பொய்யுரைக்காமல், திருடாமல், அவர்கள் தங்களால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் தங்களுடைய மார்க்கத்திற்காக ஜீவிக்க முயற்சிக்க முடியும். ஆனால் அவர்கள் விசுவாசியாயிருந்தாலொழிய மற்றபடி அவர்கள் இழக்கப்பட்டுப்போவார்கள். ஆகையால் வேதத்தில் பிராமணத்தைக் கடைபிடிப்பவர்களின் அடையாளம் என்பதே இல்லை. கால்வினிசம்…தேவன் உங்களுக்காக என்ன செய்தார் என்பதே கிருபையாயுள்ளது, நீங்கள் தேவனுக்காக என்ன செய்கிறீர்கள் என்பது கிரியைகளாயிருக்கின்றன. அது முற்றிலுமாக வேறுபிரிக்கப்பட்டுள்ளது. 321 நீங்கள் பொய்யுரைப்பதை விட்டுவிட்டு, புகைப்பதை விட்டு விட்டு, திருடுவதை விட்டுவிட்டு, விபச்சாரம் செய்வதை விட்டுவிட்டு, கற்பனைகளைக் கடைபிடித்து, சபைக்குச் சென்று, ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராபோஜனம் எடுத்து, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவி, எல்லாக் காரியங்களையும் செய்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, இந்த மற்ற எல்லாக் காரியங்களையும் செய்திருந்தாலும், நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டு, தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தாலொழிய, நீங்கள் இழக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” 322 ஏசா ஒரு கிறிஸ்தவனாய் மாறுவதற்கு தன்னால் முடிந்ததை செய்ய முயற்சித்தும், அதைச் செய்ய முடியாமற்போயிற்று. அவன் மனங்கசந்து அழுது, மனம் மாறுதலைக் காண தேடியும், அதை கண்டடைய முடியாமற்போயிற்று என்று வேதம் உரைத்துள்ளது. அவன் பிறப்பதற்கு முன்னரே தேவன் அவனை ஆக்கினைக்குட்படுத்தினார், ஏனென்றால் அவன் தன்னுடைய இருதயத்தில் ஒரு கெட்ட வஞ்சகனாயிருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். தேவன் அதை முன்னறிவினால் அறிந்திருந்தார். அவர், “நான் யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்” என்றார். ஏசா நற்பண்புகளைக் கொண்ட மனிதனைப் போலக் காணப்பட்டான். அவன் வீட்டில் தரித்திருந்து தன்னுடைய வயதான பார்வையிழந்த தந்தையைக் கவனித்து, கால்நடைகளை போஷித்து மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்த ஒரு நல்ல பையனாய் இருந்தான். 323 யாக்கோபு அம்மாவினுடைய செல்லப் பிள்ளையாய், கதை சொல்லும் பெண்மைத்தன்மை கொண்ட சிறுவனாய் இருந்தான். அந்தவிதமாகத்தான் அவன் இருந்தான். நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். வேதம் அதை ஒப்புக்கொள்கிறது, அதை கூறியுமுள்ளது. அவன் சுற்றித்திரிந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்துகொண்டிருந்தான். தாயோடு, தாயோடு சுற்றிக்கொண்டிருந்தான். ஆனால் அதே சமயத்தில் யாக்கோபு தன்னுடைய எல்லா ஏற்றத்தாழ்வுகளிலும், தன்னுடைய பெண்மை தன்மைகொண்ட வழிகளிலும், அவன் சேஷ்டபுத்திரபாகத்திற்கு அப்பொழுதும் மரியாதை கொண்டிருந்தான். அதுவே முக்கியக் கருத்தாகும். 324 ஏசா யாக்கோபைக் காட்டிலும் இருமடங்கு நற்பண்புகள் கொண்டவனாயிருந்தான். நாம் அவனை இன்றைக்கு நியாயந்தீர்க்க வேண்டியதாயிருந்தால், நம்முடைய சபையின் ஒரு அங்கத்தினனாயிருக்க, நீங்கள் அவனை அறிந்திராவிடில் ஆயிரத்தில் ஒருவன் என்று நீங்கள் ஏசாவையே தெரிந்துகொள்வீர்கள். ஆனால் தேவன் யாக்கோபைத் தெரிந்துகொண்டார். 325 பரிசுத்த பவுல் ஒரு ஊழியக்காரணாயிருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், நீங்கள் அவனோடு என்ன செய்திருப்பீர்கள்? ஒரு சிறிய, கொக்கி மூக்கி யூதன், கோணலான வாயினை உடையவனாயிருக்க, தொடர்ந்து வம்பு பண்ணிக்கொண்டு, அவன் எப்படியாய் சபையை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருந்தான். அவன் எல்லாக் காரியத்தையுமே செய்யப் போவதாயிருந்தான். அவன் மன்னிக்க முடியாத பாவத்தை செய்துவிட்டான் என்றே நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் தேவன், “அவன் என்னுடைய ஊழியக்காரன்” என்றார். 326 தேவன் மனுஷர்களை எடுத்து அவர்களை வித்தியாசமானவர்களாக்குகிறாரேயன்றி, மனுஷர்கள் தேவனை எடுத்து வித்தியாசமாக்குகிறதில்லை. தேவன் மனிதனை எடுத்து, அவனை வித்தியாசமாக்குகிறார். அது நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள், நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்பது அல்ல, அது தேவன் என்ன செய்கிறார் என்பதாய் உள்ளது. அங்குதான் காரியமே உள்ளது. அதுவே கதையாய் உள்ளது. 327 இப்பொழுது இந்த மகத்தான மெல்கிசேதேக்கு, இங்கே அவர் பேரிலான என்ன ஒரு கதை! நாம் அதைச் சற்று வாசிக்க விரும்புகிறோம், அப்படியே…நாம் மிக வேகமாக அதை பார்க்க வேண்டியதாயுள்ளது. நாம் இங்கே ஒரு குறிப்பிட்ட வேதவாக்கிய பாகத்தின் பேரில் இங்கே மீண்டும் துவங்கப் போகிறோம். நாம் கிட்டத்தட்ட 15-வது வசனத்திலிருந்து துவங்கப்போகிறோம். அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறோரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதனால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. 328 இப்பொழுது, மெல்கிசேதேக்கு ஒரு ஆசாரியனாயிருந்தார். அவர் அவ்வாறு இருந்தாரா? அவர் என்னவாயிருந்தார் என்பது இதோ உள்ளது. ஆதியிலே தேவன் ஒரு மகத்தான ஆவியின் ஊற்றாயிருந்தார். அது சரிதானே? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவருக்கு பிறப்பிடமே இல்லாதிருந்தது. அவருக்கு இறப்பிடமும் இல்லாதிருந்தது. அவருக்கு நாட்களின் துவக்கமும் இல்லாதிருந்தது. அவருக்கு வருடங்களின் முடிவும் இல்லாதிருந்தது. அவர் நித்தியத்தைப் போன்றே நித்தியமாய், நித்தியமானவராயிருக்கிறார். அவர் ஒருபோதும் பிறக்கவில்லை. அவர் ஒருபோதும் மரிக்கவில்லை. 329 அங்கே அதில் அவர் ஏழு வகையான ஆவிகளை உடையவராயிருந்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். அது சரிதானே? வேதம் வெளிப்படுத்தின விசேஷத்தில், “தேவனுடைய சிங்காசனத்து முன்பாக ஏழு ஆவிகள்” என்று கூறியுள்ளது. அது சரிதானே? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஏழு, பல்வேறான ஏழு ஆவிகள். ஏழு நிறங்கள் உள்ளன என்பதை நாம் கண்டறிகிறோம். ஏழு சபைக் காலங்கள் அங்கே இருக்கின்றன. ஓ, அது அப்படியே இயங்குகிறது. ஏழு என்ற எண் முழு நிறைவானதாயுள்ளது, தேவன் முழு நிறைவானவராயிருக்கிறார். ஏழு ஆவிகள், அந்த ஏழு ஆவிகள் பரிபூரணமாயிருந்தன. முதல் ஒன்று சிவப்பு நிறமாயிருந்தது; பரிபூரண அன்பு, மீட்பு. எப்படியாய் அந்த நிறங்களைப் பற்றிக் கூற நமக்கு நேரமிருந்தால், அப்பொழுது அந்த நிறங்கள் ஒவ்வொன்றும் தேவனுடைய தூய்மையைச் சுட்டிக் காட்டுகின்றன என்பதைக் காண்பிக்கலாம். ஆமென். அந்த நிறங்கள், ஏழு இயற்கையான நிறங்களாய் உள்ளன. அந்த நிறங்கள் தேவனுடைய தூய்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்த…அந்த நிறங்கள் தேவனுடைய நோக்கங்களையும், தேவனுடைய மனப்பான்மையும் சுட்டிக்காட்டுகின்றன. அந்த ஏழு நிறங்களும், அவைகள் ஏழு சபைக் காலங்களை, ஏழு நட்சத்திரங்களை, ஏழு தூதர்களையும் சுட்டிக்காட்டின. எல்லா வேதவாக்கியத்தினூடாகவும், ஏழு ஊழியர்கள், ஏழு செய்தியாளர்கள், ஏழு செய்திகள் எல்லாமே ஏழுகளில் இருந்தன. ஏழு நாட்கள், ஆறு நாட்கள், ஏழாவது ஓய்வுநாளாயிருந்தது; பரிபூரணம், முழு நிறைவு. ஓ, அது அழகாயுள்ளது, நாம் அதைக் குறித்து ஆராய்ந்து பார்த்து, அந்த நிறங்களை விளக்கிக் கூற நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். 330 சிவப்பு நிறத்தை எடுத்துக்கொள்வோம். நாம் எடுத்துக்கொள்கிற முதல் நிறம் சிவப்பாயுள்ளது. சிவப்பு என்பது என்ன? சிவப்பு ஒரு அபாயத்தின் அடையாளமாயுள்ளது. சிவப்பு ஒரு மீட்பின் அடையாளமாயுள்ளது. நீங்கள் சிவப்பு நிறத்தை சிவப்பு நிறத்தினூடாக நோக்கிப் பார்த்தால், அது என்ன நிறமாயிருக்கிறது? வெள்ளை. அது சரியே. ஆகையால் சிவேரென்றிருந்த பாவத்தை மூட சிவப்பான இரத்தம் சிந்தப்பட்டபோது, தேவன் சிவப்பான இரத்தத்தினூடாக சிவேரென்றிருந்த பாவத்தை நோக்கிப் பார்க்க, அது வெண்மையாக மாறுகிறது. விசுவாசி பாவம் செய்ய முடியாது. நிச்சயமாக முடியாது. தேவனுடைய வித்து, தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவன் மேல் தங்கியுள்ளது. தேவனால் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தைத் தவிர வேறொன்றையுமே பார்க்க முடியாது. அவருடைய சபையில் என்ன இருந்தாலும், அது என்னவாயிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, தேவன் அதைக் காண்கிறதில்லை, ஏனென்றால் இயேசு பிரதான ஆசாரியராய் தொடர்ந்து பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அதைப் போன்ற அப்பேர்ப்பட்ட ஒரு பலி அவனுக்காக அங்கே இருந்து கொண்டிருக்கும்போது, அவனுக்கு பாவம் செய்ய வழியே இல்லை. நிச்சயமாக இல்லை. 331 இப்பொழுது நீங்களோ, “அது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பினை அளிக்கிறது…” என்று கூறினால், அப்பொழுது நீங்கள் சரியில்லை என்பதையே அது காண்பிக்கிறது. 332 நீங்கள் அதை பாராட்டுவீர்கள். நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவராயிருந்து பாவமானது உங்களைச் சுற்றி சோதித்துக்கொண்டிருக்க, அப்பொழுது நீங்கள் பாவம் செய்ய முடியாத ஒரு நிலையில் இருந்தால், நீங்கள் அதை நேசிப்பீர்கள். “ஏனென்றால் தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது, அவனால் பாவம் செய்ய முடியாது.” வேதம், “ஒருதரம் இயேசுவின் இரத்தத்தினால் சுத்தமாக்கப்பட்ட பின்பு, பாவத்தின் வாஞ்சையே இனி ஒருபோதும் இருக்காது” என்று உரைத்துள்ளது. ஆனால் உங்களுக்கு அப்படி ஒரு வாஞ்சை உண்டாயிருக்குமானால், அப்பொழுது உங்களுடைய இருதயம் தேவனோடு சரியாக இல்லை. 333 இப்பொழுது நீங்கள் தவறு செய்வீர்கள், ஆனால் நீங்கள் அதை மனப்பூர்வமாய் செய்கிறதில்லை. புரிகிறதா? உங்களுக்கு கண்ணிவைக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு கண்ணி வைக்கப்பட்டுள்ள எந்த காரியத்திற்குள்ளும் அல்லது நீங்கள் செய்ய வேண்டும் என்று கருதி ஒரு காரியத்தையும் செய்கிறதில்லை, அப்பொழுது அதே சமயத்தில் அது பாவமல்ல, ஏனென்றால் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று நீங்கள் காண்கிற அந்த நிமிடத்திலேயே மனந்திரும்பிவிடுவீர்கள். நீங்கள் உடனடியாகத் திரும்பி, “நான் அவ்வாறு செய்யவேண்டுமென்று செய்யவில்லை…நான் அதைப் பார்க்கவில்லை” என்று கூறுவீர்கள். நீங்கள் அதையே ஜீவகாலமெல்லாம் கூறுவீர்கள். ஒரு மனிதன் அவ்வாறிருக்க விரும்புகிறதில்லை, நாம் மிகவும் முட்டாளாகவும், மிகவும் அந்தகாரத்திலும் இங்கே பூமியில் இருக்கிற காரணத்தால், எல்லா நேரத்திலும் நம்மை மறைத்து காத்துக்கொள்ள நமக்காக ஒரு இரத்த பாவநிவிர்த்தி உள்ளது. காரணம், நாம் சந்தித்த முதல் தவறு … 334 இப்பொழுது, அங்குதான் உங்களுடைய பிரமாணக்காரரின் கருத்தும் உள்ளது. “ஓ, உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அந்த ஸ்திரீ பரிசுத்தமாக்கப்பட்டிருந்தாள். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், அவள் தவறு செய்துவிட்டாள். அவள் பின் வாங்கிப்போய்விட்டாள் என்பதை நான் அறிவேன்.” அது தவறாகும். அவள் பின்வாங்கிப் போய்விடவில்லை. அவள் ஒரு தவறு செய்துவிட்டாள். அவள் அதை மனப்பூர்வமாய் செய்திருந்தால், அப்பொழுது அவள் துவக்கத்திலேயே சரியாயிருக்கவில்லை. 335 அவள் அதைச் செய்ய வேண்டும் என்று கருதி செய்யவில்லையென்றால், அவள் பரிசுத்த தேவனுடைய சபைக்கு முன்பாக நடந்து சென்று, அதை அறிக்கை செய்து, “நான் தவறாயிருக்கிறேன், நீங்கள் என்னை மன்னியுங்கள்” என்று கூறுவாள். நீங்கள் அதைச் செய்ய கடமைபட்டவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அதை உங்களுடைய இருதயத்திலிருந்து செய்யவில்லையென்றால், அப்பொழுது நீங்களாகவே பீடத்தண்டைக்கு சென்றிருக்க வேண்டும். உண்மை. சபையில் உண்மையான பரிசுத்தம் உண்டு. அசலான பரிசுத்தம் உண்டு, உங்களுடைய பரிசுத்தம் அல்ல, கிறிஸ்துவினுடைய பரிசுத்தம் ஆகும். 336 அவருக்கு அளிக்க எந்தப் பரிசுத்தமும் என்னிடத்தில் இல்லை. ஆனால் நான் அவருடைய, ஓ, அவருடைய கிருபையில் நம்பிக்கைக்கொண்டிருக்கிறேன். நான் அதற்கு தகுதியற்றவனாயிருக்கிறேன், அதற்கு தகுதியாக என்னால் செய்ய முடிந்தது ஒன்றுமேயில்லை. ஆனால் கிருபையினால் அவர் என்னைக் கூப்பிட்டு, என்னை வரும்படிக்கு அழைத்தார். நான் அவரை நோக்கிப் பார்த்தேன். அவர் என்னிடத்திலிருந்த வாஞ்சையை எடுத்துப்போட்டுவிட்டார். நான் ஒவ்வொரு மாதத்திலும், ஒவ்வொரு வருடத்திலும் ஆயிரக்கணக்கான தவறுகளைச் செய்கிறேன். நிச்சயமாக. நான் செய்கிறேன். ஆனால் நான் தவறாயிருக்கிறேன் என்பதை நான் காணும்போது, நான், “தேவனே, நான் அதைச் செய்ய வேண்டுமென்று செய்யவில்லை. நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். நான் அதைச் செய்ய வேண்டும் என்று கருதவில்லை. எனக்கு அதில் கண்ணி வைக்கப்பட்டது. நான் அதைச் செய்ய வேண்டுமென்று கருதவில்லை. கர்த்தாவே, நீர் என்னை மன்னியும்” என்று கூறுவேன். 337 நான் என்னுடைய சகோதரனுக்கு தவறு செய்திருந்தால், அப்பொழுது நான், “சகோதரனே, என்னை மன்னியும். நான் அதைச் செய்ய வேண்டும் என்று கருதவில்லை” என்று கூறுவேன். நிச்சயமாகவே, தேவன் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். 338 ஓ, அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அங்கே இரத்த பலியானது உள்ளது. அங்கே சுவிசேஷத்தின் வல்லமை உண்டு, அந்த பரிசுத்த சபை முன்னே செல்கிறது. நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை செய்துவிட்டீர்கள் என்ற காரணத்தினால் அல்ல; அது நீங்கள் அதனோடு செய்வதற்கு ஒன்றுமேயில்லாதிருந்த ஒரு காரியமாயுள்ளது. அங்குதான் பாவநிவிர்த்தி உள்ளது. 339 இப்பொழுது, இந்த மெல்கிசேதேக்கு, அவர் வந்த போது, 340 நான் உங்களுக்கு மற்றொரு காரியத்தை கூற விரும்புகிறேன். நீங்கள் எப்போதாவது ஒரு மும்முனை கொண்ட கண்ணாடித் துண்டை எடுத்துப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் அந்த மும்முனைக்கொண்ட கண்ணாடித் துண்டை எடுத்து, சூரிய வெளிச்சம் அதில் படும்படி வையுங்கள், அப்பொழுது அது ஏழு பரிபூரண நிறங்களை உண்டுபண்ணும். ஒரு மும்முனைகொண்ட கண்ணாடித் துண்டு ஒரு வானவில்லை தோற்றுவிக்கும். அது முற்றிலும் உண்மை. இப்பொழுது நமக்கு நேரமிருந்தால், நாம் அதன்பேரில் சென்று பார்க்கலாம். மூன்று பரிபூரணத்தைக் கொண்டு வருகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அங்குதான் காரியமே உள்ளது. மூன்றின் மூலமாக பரிபூரணம் உண்டாகிறது. தேவன் மனிதனுக்கு மேலே இருந்தார். தேவன், மனிதனுக்குள்ளிருந்து இயேசு என்று அழைக்கப்பட்டார்: தேவன் சபைக்குள் இருக்கிறார். அப்பொழுதே பரிபூரணம். 341 தேவன், இங்கே மேலே தேவன் ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் இருந்த வரை மனிதன் பாவம் செய்தான். சரியாகக் கூறினால், ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் தேவன் இருந்த வரையில், மனிதன் தேவனுக்கு முன்பாக பாவம் செய்தான், ஏனென்றால் அவன் அப்பொழுது ஒரு அசுத்தமான சிருஷ்டியாயிருந்தான், அவருக்கு முன்பாக மிருகத்தின் இரத்தம் வைக்கப்பட்டிருந்தது. 342 அதன் பின்னர் தேவ ஆட்டுக்குட்டியானவர் வந்தார், அது தேவனுடைய நிச்சயமான இரண்டாம் கட்டமாயுள்ளது; அதே தேவன், மற்றொரு உத்தியோகம். அப்பொழுது இந்த தேவன்…கிறிஸ்துவுக்குள் இருந்தார், அது அக்கினி ஸ்தம்பத்திற்குள்ளிருந்த அதே தேவனாயிருந்தது. அதே தேவன் மாம்சமாக்கப்பட்டு, நமக்குள்ளே வாசம்பண்ணினார். அப்பொழுது மனிதன் அவரைக் குறித்து பரிகசித்தான், அது அப்பொழுதும் அதற்காக கணக்கில் எடுக்கப்பட்டது. அப்பொழுது இரத்தமானது இன்னும் சிந்தப்படாததாயிருந்தது. அது உண்மை. இயேசு, “நான் உங்களுக்கு மன்னித்துவிடுவேன்” என்றார். 343 ஆனால் அப்பொழுது மாம்சமான அதே ஒருவர் மீண்டும் அக்கினி ஸ்தம்பமானார். “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். நான் தேவனிடத்திற்குப் போகிறேன்.” இங்கே பவுல் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் அவரை அந்த அதே அக்கினி ஸ்தம்பத்தில் சந்தித்ததை நாம் கண்டறிகிறோம். பேதுரு அவரை சிறைச்சாலையில் அந்த அதே அக்கினி ஸ்தம்பத்தில் சந்தித்ததை நாம் கண்டறிகிறோம். நிச்சயமாக. நாம் இன்றைக்கு அவரை நமக்கு மத்தியில் அதே அக்கினி ஸ்தம்பமாகக் காண்கிறோம். 344 ஆனால் பரிபூரணம் அந்த இடத்திற்கு வந்துள்ளது, அதாவது அந்த நடுவான நபர்…இப்பொழுது, இங்கே ஒரு யூதன் இருக்க நேர்ந்தால் அல்லது பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ளுகிற யாராவது இருக்க நேர்ந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அதை உங்களுக்கு நிரூபித்துக்காட்டட்டும். நான் இப்பொழுது என்னோடு பழைய ஏற்பாட்டை வைத்திருக்கவில்லை. இது புதிய ஏற்பாடாய் உள்ளது. ஆனால் கூடார சுத்திகரிப்பின்போது யூத பலியில், தேவசமூகத்து அப்பத்தை ஏறெடுத்துப் படைக்கும் அந்த கோஷர் அப்பத் தட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த மூன்று அப்பங்களில், நடுவில் வைக்கப்பட்டிருந்த அப்பம் உடைக்கப்பட்டிருந்தது, அதை எந்த யூதனிடத்திலாவது கேட்டுப்பாருங்கள். அது கிறிஸ்துவாயிருந்தது. அடுக்கின் மையத்தில் இருந்த அப்பமானது உடைக்கப்பட்டிருந்தது: கிறிஸ்து, அது இடையில் இருந்தது. மீட்பிற்காக ஒரு உடைதல் எங்கோ உண்டாக வேண்டியதாயிருந்தது. அந்த கோஷர் அப்பம் மீட்பாக, அந்த அப்பம் கருதப்பட்டது. 345 இங்கே அவர் இருக்கிறார். இன்றிரவு நாம் இராபோஜனம் எடுக்கும்போது, நாம் அந்த கோஷர் அப்பத்தைப் பிடுகிறோம்,. ஏனென்றால் அது கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது. அவருடைய நீதியினூடாக நாம் அவருடைய நீதியாகும்படிக்கு, நம்முடைய பாவங்களுக்கான ஒரு கிருபாதாரபலியாயிருக்கும்படி, அவர் கல்வாரியிலே நொறுக்கப்பட்டார். ஏனென்றால், நாம் அவருடைய நீதியாகும்படிக்கு அவர் நம்முடைய பாவமானார். சகோதரனே, அது முற்றிலும் கிருபையாயுள்ளது. முற்றிலுமாக. நீங்கள் வேறெந்த வழியிலும் நீதிமானாகவே முடியாது, அதற்கு வழியேக் கிடையாது. 346 இப்பொழுது, இந்த மெல்கிசேதேக்குக்கு, வழியிலே சந்தித்த இந்த மகத்தான நபருக்கு, அவன் செலுத்தினான், ஆபிரகாம் அவருக்கு தசம்பாகத்தை செலுத்தினான். அவர் எவ்வளவு ஒரு மகத்தான மனிதனாய் இருந்திருக்க வேண்டும்! இப்பொழுது துரிதமாக கவனியுங்கள். அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,… 347 இப்பொழுது அது பிரமாணத்தைக் கடைபிடிப்பவரின் நியாயப்பிரமாணம் என்பதை பார்த்தீர்களா? நியாயப்பிரமாணம், “கொலை செய்யாதிருப்பாயாக. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக” என்று உரைத்தது. 348 இயேசு சுற்றித் திரும்பி, “‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் அவனை ஏற்கெனவே கொலை செய்தாயிற்று ‘விபச்சாரம் செய்யாதிருப்பாயாக’ என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” என்றார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அதாவது ஸ்திரீகள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்றும், சரியானதை எப்படி செய்ய வேண்டும் என்றும் போதிக்க வேண்டும். நீங்கள் தவறாக உடை உடுத்துகிறீர்கள், அந்த காரணத்தினால் புருஷர்கள் உங்களை தவறான வழியில் நோக்கிப் பார்க்கிறார்கள், அப்பொழுது நீங்கள் விபச்சாரம் செய்த, அதாவது அதேக் காரியத்தை நீங்கள் செயலில் செய்துவிட்டது போன்ற குற்றவாளியாயிருக்கிறீர்கள். இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். 349 இந்தக் கடுஞ்சின கோபக்கார ஜனங்களாகிய நீங்கள் எப்போதும் யாரைக் குறித்தாவது மிக மோசமாகப் பேசுவது போன்ற அத்தகையகாரியங்களைச் செய்கிறீர்கள். ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் (உங்களுடைய சகோதரனுக்கு எதிராக) ஒரு வார்த்தைப் பேசினாலும் நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள், அது சரியல்ல, அப்படியே போய் அவனை சின்னாபின்னாமாக்குவதல்ல. நீங்கள் ஒரு கத்தியை எடுத்து ஒரு மனிதனைக் கொல்ல, அவனுடைய முதுகில் குத்தவேண்டியதில்லை. நீங்கள் அவனுடைய நற்பெயரை உடைத்தெரிய முடிந்தால் அவனைக் கொன்று, அவனுடைய செல்வாக்கையும் அழித்துவிடுகிறீர்கள். இங்குள்ள உங்களுடைய போதகருக்கு எதிராகப் பேசி, அவரைக் குறித்து மோசமாக ஏதோ ஒரு காரியத்தைக் கூறினால், அப்பொழுது நீங்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது போன்றதாகும். அவரைப் பற்றி சரியானதாயிராத ஏதோ ஒரு காரியத்தைக் கூறியிருப்பது, அது ஜனங்களோடுள்ள அவருடைய செல்வாக்கையும், அது போன்ற காரியங்களையும் கொன்று போட்டுவிடும். நீங்கள் அதைக் குறித்து குற்றவாளியாயிருக்கிறீர்கள். இயேசு என்ன கூறினார். 350 இப்பொழுது, இங்கே கவனியுங்கள், பவுல் இங்கே எதைக்—எதைக் கற்றுணர்த்த முயற்ச்சித்துக்கொண்டிருந்தான். நான் இந்த பண்டைய வேதாகமத்தை நேசிக்கிறேன். அது உங்களை சரிப்படுத்துகிறது. பாருங்கள். ஓ, அப்படியே இங்கே நோக்கிப் பாருங்கள். இப்பொழுது நாம் பதினான்காம் வசனத்தை வாசிக்கையில்… “நம்முடைய கர்த்தர் யூதா கோத்திரத்தில் தோன்றினாரென்பது…” பொறுமையாயிருங்கள், நான் இங்கே மற்றொரு வசனத்தை வாசிக்கப் போகிறேன். இல்லை, இங்கே கீழே 16-வது வசனம். அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாய்ப்பிரமாணத்தின்படி ஆசாரியராகமல்… 351 அது பிரமாணம் சார்ந்ததாயுள்ளது, நீங்கள் பாருங்கள். “ஓ சகோதரனே, நான்-நான் அதை செய்யக்கூடாது, நான் அதைச் செய்யக் கூடாது, எனக்குத் தெரியும், ஆனால் நான்…” அதுவல்ல இது. அன்பே இதைச் செய்கிறதாயுள்ளது. 352 நாம் எப்படியாய் அதனூடாகச் சென்று பார்த்தோம்! நான், “என்னுடைய…என்னுடைய மனைவியைக் குறித்து இவ்வாறு கூறுவதாக வைத்துக்கொள்வோம், ‘ஓ, நான் இரண்டு மனைவிகளையுடயவனாயிருக்க விரும்பி, நான் இந்த ஒருவளோடு சுற்றித் திரிய விரும்பி, இந்த ஒன்றை அங்கே அவளோடு செய்ய விரும்பினால், நான் அவ்வாறு செய்ய விரும்பினால், என்னுடைய மனைவி என்னை விவாகரத்து செய்து விடுவாள்…என்னுடைய பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்கள்…என்னுடைய ஊழியம் இழக்கப்படும்.’” நீங்கள் அழுக்கான, அழுகிப்போன மாய்மாலக்காரனாயிருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் முதலிலேயே அவளை சரியாக நேசிக்கவில்லை. அது முற்றிலும் உண்மையே. 353 நீங்கள் அவளை நேசித்திருந்தால், அப்பொழுது அதைக் குறித்து எந்த சட்டப் பிரமாணமும் இல்லாதிருக்கும். நீங்கள் எப்படியும் அவளை நேசித்தால், நீங்கள் அவளோடு தரித்திருப்பீர்கள். அது முற்றிலும் உண்மை. ஸ்திரீகளாகிய நீங்களும் அதேக் காரியத்தையே உங்களுடைய கணவனுக்குச் செய்வீர்கள். அது உண்மை. 354 சில சமயங்களில் ஸ்திரீகள் ஸ்தானத்தை மாற்றி, இல்லை… 355 புருஷராகிய நீங்கள் முழுவதும் வண்ணந்தீட்டப்பட்ட ஒரு யேசபேலைக் கண்டு, உங்களுக்குத் தெரியுமே, நீங்கள் சுற்றித் திரிந்து அவளுக்காக அன்புகொள்கிறீர்கள்; ஒரு கால் ஒரு நல்ல மனைவி உங்களுக்கு ஏற்கெனவே இருக்கலாம். அதன்பின்னரும் நீங்கள் உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்ளுகிறீர்கள். உங்களுக்கு அவமானம். உங்களுக்கு மற்றொரு பீட அழைப்பே தேவையாயிருக்கிறது. அது உண்மை. 356 ஸ்திரீகளாகிய உங்களில் சிலர்—உங்களில் சிலர் தன்னுடைய தலைமுடியை மழுமழுப்பாக வாரிக்கொண்டு, போதுமான வாசனைத் தைலத்தை பூசிக்கொண்டிருப்பவனையே…நோக்கிப் பார்க்கிறீர்கள். அதன்பின்னர் நீங்கள்… 357 அண்மையில் இங்கே ஒரு சிறு பெண் இருந்தாள்…இது ஒரு கேலிப்பேச்சல்ல, ஏனென்றால் நான் அதை ஒரு கேலியாக பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் இது கேலி செய்வதற்கான இடம் அல்ல என்பதை ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிறு பெண் இங்கிருந்தாள், அவள்…அப்பொழுது இங்கே அருமையான பையன்கள், கிறிஸ்தவ பையன்கள் இருந்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு, நான் இங்கே போதகராயிருந்து கொண்டிருந்தபோது, நான் வழக்கமாக வாலிபர்களுக்கு வேதபாடங்களை நடத்துவண்டு. அப்பொழுது நான் ஞாயிறு பிற்பகலில் பாலியல் மற்றுள்ள காரியங்களைக் குறித்து வாலிபப் பெண்பிள்ளைகளிடத்தில் பேசுவேன். அதன்பின்னர் அதற்கு அடுத்த ஞாயிறு பிற்பகல் வாலிபர்களிடத்தில் அந்தக் காரியங்களை தடையிட்டு அழித்துப்போட முயற்சிப்பதைக் குறித்து பேசுவேன். 358 அப்பொழுது ஒரு பெண் இங்கே டவுன்டவுனில் சிகெரெட்டுகளை புகைத்துக்கொண்டும், தன்னுடைய சட்டைப் பையில் புட்டியை வைத்துக்கொண்டுமிருந்த ஒரு குள்ளமான நபரோடு செல்லத் துவங்கினாள். அவன் ஒரு வகையான மோட்டார் வாகனத்தை இந்த பட்டிணத்தை சுற்றிலும் ஓட்டிக்கொண்டிருந்தான். அவள் அந்தப் பையனிடத்தில் என்னதான் கண்டாள் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவன் சபைக்கு வரமாட்டான். அவன் அங்கே வெளியே உட்கார்ந்திருப்பான். அவளை இங்கே சபைக்கு அனுப்பிவிட்டு, அவன் அங்கே வெளியே தன்னுடைய காரில் அமர்ந்து அவளுக்காக காத்திருப்பானேயன்றி, சபைக்குள் வரவே மாட்டான். நான் அவளிடத்தில் ஒரு நாள் பேசினேன். அவள் நியூ ஆல்பனியில் வசித்து வந்தாள். அப்பொழுது நான், “பெண்ணே, நான் உன்னிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். நீ இந்த உலகத்தில் அந்தப் பையனிடத்தில் என்ன காண்கிறாய்?” என்று கேட்டேன். மேலும் நான், “முதலாவது, நீ கொண்டுள்ள மார்க்கத்தை அவன் வெறுக்கிறான். அவன் கிறிஸ்துவை நிந்திக்கிறான். அவன் உனக்கு ஒரு கணவனாக ஒருபோதும் அமையவேமாட்டான். அவன் உன்னுடைய ஜீவியம் முழுவதும் உன்னை பரிதாபமாயிருக்கச் செய்வான்” என்றேன். நான், “நீ இங்கே தெரிந்து கொண்டு உடன் செல்லும்படியான அருமையான இளம் கிறிஸ்தவ பையன்கள் இருக்கிறார்கள். உன்னுடைய தகப்பனும், தாயும் நீ வெளியே போய் சுற்றிக்கொண்டிருக்கிற அந்தக் காரியங்களை நிந்திக்கிறார்கள், ஆனால் நீயோ எப்படியும் வெளியே போய் சுற்றிக்கொண்டிருக்கிறாய், ஆனால் நீயோ, ‘நான் இனிமையான பதினாரு வயதினை உடையவளாயிருக்கிறேன் என்று நினைக்கிறாய்’” என்று கூறினேன். 359 அவளோ முக ஒப்பனை செய்துகொண்டு, வெளியே சுற்றித் திரிய ஆரம்பித்தாள், முதல் காரியம் என்னவெனில் அவள் ஒழுங்கீனமாக விடுதிகளில் சுற்றித் திரிந்தாள். அவள் இப்பொழுது நித்தியத்திற்குச் சென்றுவிட்டாள். ஆனால், அதற்குமுன், அவள் இங்கே நின்றாள். அந்தப் பெண் அந்த பையனை நேசித்தபடியால், அவள் எனக்கு திருப்பிக் கூறிய பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவள், “அவன் அப்பேர்ப்பட்ட கவர்ச்சியான கால்களையும், அவன் மிக நல்ல வாசனையையுடையவனாக இருக்கிறான்” என்றாள். உங்களால் அதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவன் தன்மேல் வாசனையாயிருக்க வாசனைத் திரவியம் பூசிக்கொள்கிற ஒரு பெண்மைத் தன்மை கொண்டவனேயல்லாமல், ஒரு ஆண்மைத்தன்மை கொண்ட புருஷனாயிருக்கவில்லை. 360 “பாருங்கள்” அப்பொழுது நான், “சகோதரியே, சொரசொரப்பான வளைந்த கால்களும், மரநாயைப் போன்று நாற்றமெடுக்கும் நிலையையுடைய ஒரு கிறிஸ்தவ பையனோடு, அவன் முற்றிலும் ஒரு கிறிஸ்தவ பையனாயிருந்தால், அவனோடு செல்லவே விரும்புவேன்” என்றேன். அது உண்மை. உண்மையே. ஆம் 361 அதாவது, “அப்பேர்ப்பட்ட கவர்ச்சி வாய்ந்த கால்கள், மிக நல்ல வாசனை கொண்டவன்” என்பது சாக்குபோக்காயிருக்கிறது. அந்த தெருவீட்டில் வசித்தவன், முடிவிலே அந்தப் பெண்ணுடைய வாழ்க்கையை பாழாக்கிவிட்டான். அது ஒரு அவமானமாயும், வெட்கக்கேடானதாயுமுள்ளது. 362 விவாகம் கனமுள்ளது, ஆனால் அதில் ஜெபத்தோடும், பக்தியோடும் ஈடுபட வேண்டும். அந்த ஸ்திரீக்கான அசலான அன்பு உங்களை என்றென்றுமாய் இணைத்துக் கட்டும். “நீங்கள் பூமியின் மேல் எதைக் கட்டுவீகளோ, நான் அதைப் பரலோகத்தில் கட்டுவேன்.” நீங்கள் வீதியில் நடந்து செல்லும்போது, அவள் ஒருகால் வயோதிகமாய், தலைமுடி நரைத்து, சுருக்கம் விழுந்தவளாய் இருக்கலாம், ஆனால் அவள் ஒரு வாலிப பெண்ணாக, அழகான ஸ்திரீயாக இருந்தபோது நீங்கள் அவளுக்காகக் கொண்டிருந்த அதே மாறாத அன்பை நீங்கள் இன்னமும் உடையவர்களாயிருப்பீர்கள். 363 நீங்கள் ஒரு கால் தோள்பட்ட தொங்கினவராய், வழுக்கைத் தலையோடும், சுருங்கின முகத்தோடும் இருக்கலாம், ஆனால் நீங்கள் பரந்தகன்ற தோள்களோடும், சுருளான முடியோடும் நின்றபோது அன்பு கொண்டிருந்தவாறு அவள் உங்களை நேசிப்பாள், அது அவள் உண்மையாகவே தேவனையுடையவளாயிருந்தால், அவ்வாறு செய்வாள். நீங்கள் ஆற்றிற்கு அப்பால் கடந்து சென்று விடும்போது, அப்பொழுது நீங்கள் மீண்டும் வாலிப புருஷர்களாகவும், வாலிப ஸ்திரீகளாகவும் என்றென்றுமாய் ஒன்று சேர்ந்து ஜீவிக்கும்படியான தோற்றமடைவீர்கள், அந்த நேரத்தையே நீங்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது தேவனுடைய நித்திய வாக்குத்தத்தமாய் உள்ளது. அவர் அதைச் செய்வேன் என்று கூறினார். அவர், அது மாத்திரமல்ல…நாம் ஒரு நிமிடத்தில் அதைப் பெற்றுக்கொள்வோம். அவர் அதைச் செய்வதாக ஆணையிட்டார். 364 நாம் தொடர்ந்து வாசிக்கையில், இதைக் கவனியுங்கள். அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப் பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், 365 நாம் அதைப் புரிந்து கொள்ளும்படியாக, இப்பொழுது நாம் வேகமாக வாசிக்கப் போகிறோம். நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார். ஒரு ஆசாரியர் தேவைப்படும் வரையில், அவர் ஒரு ஆசாரியராய் இருப்பார். முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாய்ப் பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை… 366 உங்களாலும் முடியாது, நீங்கள் என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் மது அருந்துவதைவிட்டு விட்டு, புகைப்பிடிப்பதை விட்டு விட்டு, பொய் சொல்லுவதை விட்டு விட்டு, சபைக்குப் போய், இதைச் செய்ய முயற்சித்து, அதைச் செய்ய முயற்சித்தாலும், நீங்கள் இன்னமும் மாம்சபிரகாரமானவர்களாகவே இருக்கிறீர்கள். அது நியாயப்பிரமாணமாயுள்ளது. நியாயப்பிரமாணமானது ஒன்றையுமே பூரணப்படுத்துகிறதில்லை. ஆனால் எது பூரணப்படுத்துகிறது? கிறிஸ்து. மகிமை! நான் பொய் சொல்லுவதை விட்டுவிட்டிருக்கலாம், திருடுவதை விட்டுவிட்டிருக்கலாம், விபச்சாரம் செய்வதை விட்டுவிட்டிருக்கலாம், புகையிலை மெல்லுதலை விட்டுவிட்டிருக்கலாம், எல்லாக் காரியங்களையும் விட்டுவிட்டிருந்தாலும், நான் அப்பொழுதும் மாம்சபிரகாரமானவனாகவே இருக்கிறேன். தேவன் அதை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை, ஏனென்றால் கிருபாதாரபலியில் அவருக்கு ஏறெடுத்துப் படைக்க என்னிடத்தில் ஒன்றுமே இல்லை. 367 ஆனால் இந்த நிமிடம் நான் என்னுடைய கரங்களை ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தலையின் மேல் வைத்து, “கர்த்தாவே, நான் நல்லவன் அல்ல. நீர் என்னை உம்முடைய பணிவிடைக்காரனாக ஏற்றுக்கொள்வீரா?” என்று கேட்கிறேன். தேவன் என்னுடைய பாவங்களை முத்தமிட, நான் தேவனுடைய பார்வையில் பரிபூரணமாக நிற்கிறேன். அது உண்மை. ஏன்? நான் என்னுடைய சொந்த தகுதியின் மேல் நின்றுகொண்டிருக்கவில்லை. நான் அவருடைய தகுதியின் மேல் நின்று கொண்டிருக்கிறேன். அவர் தம்முடைய பாடுகளினூடாகவும், தம்முடைய இரத்தத்தினூடாகவும் நம்மை பரிபூரணப்படுத்தியிருக்கிறார். 368 இது முடிப்பதற்கான நேரம் என்பதை நான் காண்கிறேன். ஆனால் என்னால் முடிந்தால், துரிதமாக இதை வாசித்து முடிக்க விரும்புகிறேன். …பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப் பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை. அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; (அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பது எது? கிறிஸ்து.) அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். 369 ஏன்? நம்முடைய நன்மை எல்லாவற்றினூடாகவும், நம்முடைய எல்லா நன்மைகளினூடாகவும், நம்முடைய எல்லா நன்மைகளினூடாகவும், நாம் இன்னமும் மாம்சபிரகாரமானவர்களாயிருக்கிறோம். ஆனால் நாம் தேவனுடைய பிரசன்னத்தில் அங்கே ஒருமுறை கூட ஒரு போதும் நிற்க முடியாது என்பதை அடையாளங்கண்டு கொள்கிறோம், இயேசு கிறிஸ்துவினுடைய தகுதிகளினூடாக மாத்திரமே நிற்க முடியும், ஆகையால் அவருடைய குமாரனின் தகுதிகளினூடாக நாம் தேவனண்டைக்கு சேருகிறோம். “கர்த்தாவே, நான் குற்றமற்ற இருதயத்தோடு உம்மண்டை வருகிறேன். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் தயவுகூர்ந்து என்னை ஏற்றுக்கொள்ளும்.” ஓ, சகோதரனே, அப்பொழுது நீங்கள் ஒரு ஜீவனுள்ள வழியின் மூலமாக வந்துகொண்டிருக்கிறீர்கள். 370 “கர்த்தாவே, நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன் என்பதை நீர் அறிவீர். நான் என்னுடைய மனைவியை சரியாக நடத்துகிறேன் என்பதை நீர் அறிவீர். நான் இதைச் செய்கிறதை நீர் அறிவீர். நான் அதைச் செய்கிறேன்” என்பதனால்ல. உங்களிடத்தில் ஏறெடுத்துப் படைக்க ஒன்றுமேயில்லை. 371 “மாம்சபிரகாரமான நியாயப்பிரமாண கட்டளைகள் ஒன்றையுமே செய்ய முடியவில்லை, ஆனால் மற்றொரு நம்பிக்கை செய்ததற்குள் கொண்டுவருகிறது. அந்த நம்பிக்கை கிறிஸ்துவாயிருக்கிறது, அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் ஆத்துமா நங்கூரமாயிருக்கிறது.” கவனியுங்கள். அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல்… பிரதிப்பெயர், நீங்கள் இங்கே கவனிப்பீர்களேயானால், அது சாய்வு எழுத்துக்களில் உள்ளது. …ஆசாரியரானார். ஒரு ஆசாரியராய் மாத்திரமல்ல, ஆனால் அவர் ஆணையினாலே ஆசாரியராக்கப்பட்டார். இல்லை… 372 இப்பொழுது கவனியுங்கள். நாம் மற்ற ஆசாரியத்துவத்தைப் புரிந்து கொள்வோமாக. (அன்றியும் அவர்கள், லேவியர்கள், நியாயமும், நீதியும், நேர்மையுமான மனுஷர்கள், அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்…) 373 தேவன், “ஆரோனுடைய முறைமையின்படியே—முறைமையின்படியே, அவன் இந்த ஆசாரியர்களை ஏற்படுத்தினான்” என்றார். அவர்கள் தலைமுறைகளினூடாக வந்திருந்தனர். அவர்கள் பள்ளிக்குச் சென்று, பிரசங்கிமார்களாயிருக்க கற்கிறார்கள். அவர்கள் அவ்வாறே வருகின்றனர். ஆகையால் தேவன் அவர்களை அந்தவிதமாக ஆசாரியர்களாக்கினார். அவர்கள் தாங்களாகவே தங்களுடைய கல்வியின் மூலம், தங்களுடைய பரம்பரையின் மூலமாக ஆசாரியர்களாக்கிக் கொண்டனர். “ஆனால் இந்த மனிதன் தேவன் ஆணையிட்டதினால் ஒரு ஆசாரியனாக்கப்பட்டார்.” இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். (…ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனமாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.) ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார். இப்பொழுது துரிதமாக. அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக் கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். கோடான கோடி ஆசாரியர்கள் இருந்தனர், ஏனென்றால் அவர்கள் மரணம், மரணம் மற்றும் பலவீனங்கள், மரணம், மரணம், மரணம் என்பதைத் தவிர வேறோன்றையும் உடையவர்களாயிருக்கவில்லை. 374 ஆனால் அவரைக் கவனியுங்கள். இவரோ, (எந்த மனிதன்?) இயேசு, என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும்… அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். எவ்வளவு தூரமாயிருந்தாலும், எவ்வளவு குனிந்திருந்தாலும், எவ்வளவு தூரமாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார், தமது மூலமாய் தேவனிடத்தி சேருகிறவர்களுக்காக… உங்களுடைய நீதியின் பேரில் அல்ல; ஆனால் உங்களுடைய அறிக்கையின் பேரில். புரிகிறதா? …தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால்… அவர் அங்கே தொடர்ந்து வேண்டுதல் செய்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். 375 அங்குதான் காரியமே உள்ளது. இப்பொழுது நான் என்னுடைய சொந்த காரியத்தை சுட்டிக்காட்ட முயற்சித்தால், நான் அதை இழந்து விடுவேன். நான், “என்னுடைய தந்தையார் ஒரு நல்ல மனிதனாயிருந்தார். என்னுடைய தந்தையார் ஒரு பிரசங்கியாராயிருந்தார். நான் சபையில் வசித்து வந்துள்ளேன்” என்று கூறி, சுட்டிக்காட்ட முயற்ச்சித்தால், நான் இன்னும் அதை இழந்துவிட்டேன். ஆனால் இந்த மனிதன் ஒரு பரிபூரணமானவர், கிறிஸ்து. அவர் அங்கே அமர்ந்து, என்னுடைய பாவங்களுக்காக தொடர்ந்து அவருடைய இரத்தத்தையே ஏறெடுக்கிறார். அங்குதான் காரியமே உள்ளது. அவர் பிரதான ஆசாரியர்களைப் போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்து முடித்தார். 376 இப்பொழுது கடைசி வசனத்தைக் கவனியுங்கள். நியாயப் பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது;… 377 அதைத்தான் நியாயப் பிரமாணம், மாம்சபிரகாரமான நியாயப்பிரமாணம் செய்கிறது. இப்பொழுது எனக்கு இங்கே இன்னும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் இருக்கக் கூடுமானால் நலமாயிருக்கும். அந்த விதமாகத்தான் நியாயப்பிரமாணம் இன்னமும் ஆண் பிரசங்கிமார்களை ஏற்படுத்துகிறது. அது உண்மை. 378 ஏன், அவர்கள், “நல்லது, இந்த மனிதன் ஒரு வேதபாட கருத்தருங்கு அனுபத்தைப் பெற்றிருக்கிறார்” என்று கூறுகிறார்கள். நான் உலகத்தில் உள்ள எல்லா வேத பாட கருத்தரங்குகளுக்காகவும் என்னுடைய சிறு பண்டைய பரலோக அனுபவத்தை விற்றுப் போடமாட்டேன். 379 “ஏன்? நாங்கள் இந்த மனிதனை கல்விபயில செய்துள்ளோம். அவர் மனிதானால் தெரிந்தெடுக்கப்பட்டவர். அவர் தானாகவே தன்னை அவ்வாறு ஆக்கிக்கொண்ட ஒரு மனிதன்.” நான் அந்தவிதமாயிருக்க விரும்பவில்லை. நான் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மனிதனையே விரும்புகிறேன். பார்த்தீர்களா? புரிகிறதா? 380 ஆனால் நியாயப்பிரமாணம் இன்னமும் ஆசாரியர்களை ஏற்படுத்துகிறது. நியாய்ப்பிரமாணம் இன்னமும் பிரசங்கிமார்களை ஏற்படுத்துகிறது. பாப்டிஸ்டு சபை, அவர்கள் பிரசங்கிமார்களை ஏற்படுத்துகிறார்கள். கைநிறைய அவர்களை வைத்திருக்கிறார்கள், அவர்களை ஏற்படுத்த ஒரு இயந்திரம் வைத்திருக்கிறார்கள். மெத்தோடிஸ்டுகளும் அவர்களை வைத்திருக்கிறார்கள். பாப்டிஸ்டுகளும் அவர்களை வைத்திருக்கிறார்கள். பிரஸ்பிடேரியன்கள், நசரேயர், யாத்திரீக பரிசுத்தர், பெந்தேகோஸ்தேக்கள், அவர்களும் பிரசங்கிமார்களை தங்களால் முடிந்தளவு வேகமாக ஒரு பெரிய நடப்பாட்சியில் செய்வதுபோல, பெரிய இயந்திரத்தை வைத்து தயாரிப்பதுபோல ஏற்படுத்துகின்றனர். அங்கே அந்தவிதமாக எழும்பி நிற்கிறார்கள்… 381 நான், “நான்—நான் நிச்சயமாகவே அடைக்காக்கும் கருவி மூலம் குஞ்சு பொறிக்கும் கோழிக்குஞ்சுகளுக்காக பரிதாப்படுவதுண்டு” என்று எப்பொழுதும் கூறியுள்ளேன். உங்களுக்குத் தெரியுமே, அந்த சிறு கோழிக்குஞ்சு அடைகாக்கும் கருவியில் குஞ்சு பொறிக்கப்படுகிறது, அது சரியான முறையில் குஞ்சுபொறிப்பதில்லை. இல்லை. பெட்டைக் கோழியே கோழிக்குஞ்சுகளைப் பொறிக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் அடைக்காகும் கருவியில் குஞ்சு பொறிக்கும் கோழிக்குஞ்சுகள், அது முட்டையிலிருந்து வெளியே வரும்போது, அது அப்படியே, “சிர்ப், சிர்ப், சிர்ப்” என்று சத்தமிட்டு, அதனோடு செல்லுவதற்கு எந்த தாயையும் உடையதாயிருக்காது. பார்த்தீர்களா? ஒரு தாய் என்றால் என்ன என்பதையே அது அறிந்திருப்பதில்லை. அது உண்மை. அது ஒன்றிற்காக சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் அது எந்தத் தாயையும் உடையதாயிருக்கவில்லை. 382 ஆனால் பெட்டைக் கோழியின் கீழ் பொறிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள், இயற்கையான வழியில் அவை சத்தமிட, தாய் அதற்கு பதிலளிக்கிறது. அது உண்மை. 383 லூயிவில்லிலும், உலகம் முழுவதிலும் இந்த பெரிய அடைகாக்கும் கருவியில் ஆயிரக்கணக்கான பிரசங்கிமார்கள் பொறிக்கப்பட்டு, இந்த வேதபாட கருத்தரங்கு அனுபவத்தோடு இங்கே வெளியே வருவதைக் குறித்து நான் சில சமயங்களில் எண்ணிப்பார்க்கிறேன். பெந்தேகோஸ்தே அடைகாக்கும் கருவிகள், பிரஸ்பிடேரியன் அடைகாக்கும் கருவிகள், பாப்டிஸ்டு அடைகாக்கும் கருவிகள், அவைகள் யாவும் தங்களுடைய கோழிக்குஞ்சுகளை பொறிக்கின்றன. அந்த குஞ்சுகள், “சிர்ப், சிர்ப், சிர்ப்” என்று அவைகள் குஞ்சு பொறிக்கப்படு வெளிவந்த அந்த அடைகாக்கும் கருவியைக் குறித்தேப் பேசுகின்றன. 384 ஆனால் நான் ஒரு தகப்பனையும், ஒரு தாயையும் உடையவனாயிருக்கவே விரும்புகிறேன். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! என்னோடு மிக அதிகமானோர் பிறந்திருக்கவில்லை, ஆனால் அங்கே இருந்தவர்கள் என்னுடைய சகோதரர்களாயிருக்கிறார்கள். ஆமென். நாம் பதில் அளிக்கிற ஒரு தாயை உடையவர்களாயிருக்கிறோம், நீங்கள்…ஒரு தாய் பரலோகத்தில் இருக்கிறாள், அவள் நம்மெல்லாருக்கும் தாயாக இருக்கிறாள். “ஒரு கோழி தன் குஞ்சுகளை கூவி அழைத்து…தன்னுடைய செட்டைகளில் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் உங்களை சேர்த்துக் கொள்வேன். ஓ, எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மதில்லாமற்போயிற்று. நீங்கள் உங்களுடைய சொந்த வேதபாட கருத்தரங்குகளை உடையவர்களாயிருந்து, உங்களுடைய ஆசாரியர்களை பொறித்தீர்கள். அவர்கள் எனக்கு எதிராக உங்களுக்குப் போதித்தார்கள். இப்பொழுது நீங்கள் உங்களுக்கு சொந்தமானதை விட்டுவிட்டீர்கள். உங்களுடைய அழிவு உங்களுக்கு முன்னால் உள்ளது.” 385 நான் இதைக் கூறுகிறேன். ஓ, ஜனங்களே, ஒரு கோழி தன் குஞ்சுகளுக்கு செய்கிறவண்ணமாக பரிசுத்த ஆவியானவர் எத்ததை தரமோ உம்மீது அசைவாட மனதாயிருந்தார். ஆனால் நீங்களோ உங்களுடைய சொந்த வழியை விரும்புகிறீர்கள். நீங்கள் அதைக் குறித்த உங்களுடைய சொந்த வழியையேப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். 386 இந்த இரவுகளில் ஒன்றில் நான், “உங்களுடைய சொந்த வழி” என்பதன் பேரில் பிரசங்கிக்க விரும்புகிறேன். காயீன் தன்னுடைய சொந்த வழியை விரும்பினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்றைக்கு மனிதனும் தன்னுடைய சொந்த வழியையே விரும்புகிறான். “ஆனால் மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” 387 இப்பொழுது கவனியுங்கள். “புது-புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே…” நான் நினைக்கிறேன், இப்பொழுது அது…இல்லை. நான் தவறான இடத்தில் இருந்தேன். 388 28-வது வசனம். நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப் பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது. 389 தேவன் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. குமாரன் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கிறார். அவருக்கு ஒரு துவக்கம் இருந்ததேயில்லை. அவருக்கு ஒரு முடிவும் இருந்ததில்லை. நியாய்ப்பிரமாணம் அதைப் போன்ற எதையும் தோற்றுவிக்க முடியவில்லை, ஏனென்றால் அது மாம்ச பிரகாரமானதாயிருந்தது. சபையும் அது போன்ற எந்தக் காரியத்தையும் தோற்றுவிக்க முடியாது, ஸ்தாபனங்கள், ஏனென்றால் அவைகள் மாம்சபிரகாரமானவைகளாயிருக்கின்றன. வேத பாட கருத்தரங்குகளும் அதைப் போன்ற எந்தக் காரியத்தையும் ஒருபோதும் தோற்றுவிக்க முடியாது. அவர்கள் உலகத்தையே அதற்கு கல்விப் பயில முயற்ச்சித்தனர். அவர்கள் அதற்கு அதை ஸ்தாபனமாக்க முயன்றனர். அவர்கள் தங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்ய, உலகத்தில் உள்ள ஒவ்வொரு வழியிலும் அவர்கள் முயன்று, முக்கியமான காரியத்தை விட்டுவிட்டனர். “நீங்கள் அதில் மீண்டும் பிறக்க வேண்டும்.” தேவன் உங்களை உருவாக்கிறவிதமாக நீங்கள் இருக்கிறீர்கள், நிச்சயமாக, நீங்கள் இதைச் செய்வதை விட்டுவிட்ட காரணத்தினால் அல்ல. 390 இப்பொழுது நசரேயன்களே, நீங்கள் ஒரு மோதிரத்தை அணிந்து கொள்ளக் கூடாது, நீங்கள் ஒரு கைக்கடிகாரம் அணிந்து கொள்ளக்கூடாது, நீங்கள் இன்ன-இன்ன காரியங்களைச் செய்யக் கூடாது, உங்களுடைய கைகளின் சட்டையளவு இந்தளவு நீளமாய் இருக்க வேண்டும், அரைக்கைச் சட்டைகள், உங்களுடைய பாவாடைகள் அந்தளவு நீளமாயிருக்க வேண்டும், புருஷர்கள் விடுதிகளில் தங்கக் கூடாது, நீங்கள் இவ்வாறு இல்லையென்றால், அவர்கள் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கமாட்டார்கள். சரி, இதோ கத்தோலிக்கம் உள்ளே வருகிறது. அவர்கள் தங்களுடையதை உடையவர்களாயிருக்கிறார்கள். இதோ மெத்தோடிஸ்டுகள் உள்ளே வருகிறார்கள், அவர்களும் தங்களுடையதை உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அளப்பதற்கு ஒரு அளவுகோலை உடையவர்களாயிருக்கிறார்கள். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால், சரி, அவ்வளவுதான். புரிகிறதா? 391 அதன்பின்னர், ஆனால் உண்மையான காரியமாயிருப்பது இதுவேயாகும், அதாவது, “நான் என்னுடைய கரங்களில் ஒன்றையுமே கொண்டு வரவில்லையே! நான் வெறுமனே உம்முடைய சிலுவையையே பற்றிக்கொள்கிறேன். ஓ தேவனே, நிர்வாணமாய், காயமடைந்துள்ளபடியால், ஒத்தாசை தேவைப்படுகிறது. ஓ, நான் மிகத் தாழ்மையாய் வருகிறேன், கிறிஸ்துவே, நான் ஒன்றுமில்லை, எனக்குள்ளும் ஒன்றுமேயில்லை என்று அறிக்கை செய்கிறேன். ஓ தேவனே, என்னை ஏற்றுக்கொள்ளும்” என்பதாகும். அப்பொழுது தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறார். 392 இப்பொழுது நீங்கள் மொழியின் முதல் எழுத்துக்களைக் கூட அறியாதிருக்கலாம். நீங்கள் காப்பிக் கொட்டைகளை பிளப்பதிலிருந்து உண்டாகும் காபி பாணத்தை அறியாமலிருக்கலாம். நீங்கள் கீ, ஹா என்ற விலங்குகளின் சத்தத்திற்கு வித்தியாசம் தெரியாமலிருக்கலாம், வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாமலிருக்கலாம். உங்களுக்கு என்ன தெரியவில்லை என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு காரியம் உண்டு, அது இயேசு கிறிஸ்து ஒரு பாவியாக உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார் என்பதேயாகும். நீங்கள் அவருடைய நீதியில் நிற்கும்படியான உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறீர்கள் என்றும் ஒவ்வொரு நாளும் அறிக்கை செய்து உங்களுடைய முழு நோக்கங்களும் அவரை நோக்கியே இருக்குமானால், அப்பொழுது நீங்கள் பரலோகம் சென்றடைவீர்கள். அவ்வளவுதான் அங்கு செல்ல தேவையாயுள்ளது, ஏனென்றால் கிறிஸ்துவுக்குள்ளிருந்த ஜீவன் உங்களுக்குள் இருக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் இழக்கப்படுவீர்கள். 393 முடிப்பதற்கு சற்று முன்பு, தேவன் ஆபிரகாமோடு பண்ணின நிபந்தனையற்ற உடன்படிக்கை உங்களுக்கு நினைவிருக்கிறதா? தேவன், “நான் காணட்டும்…” என்று கூறினபோது, அந்த மாலை அவர் என்ன செய்தார். ஆபிரகாம், “நீர் அதை எப்படிச் செய்யப்போகிறீர் என்பதை நான் காணட்டும்” என்றான். அது ஆதியாகமம் 16-ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். “நீர் அதை எப்படி செய்யப் போகிறீர் என்பதை நான் காணட்டும்.” 394 அவர், “ஆபிரகாமே, இங்கே வா” என்றார். அவர் ஆபிரகாமை அழைத்து, “போய் ஒரு—ஒரு ஆட்டுக்கடாவை எனக்குக் கொண்டுவா, போய் ஒரு—ஒரு வெள்ளாட்டை எனக்குக் கொண்டுவா, போய் ஒரு கிடாரியை எனக்குக் கொண்டுவா, நீ அவைகளை இங்கே கொண்டுவந்து, ஒரு பலி செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார். 395 ஆபிரகாம் சென்று, செம்மறியாட்டையும், வெள்ளாட்டையும், ஆட்டுக்குட்டியையும்…இல்லை கிடாரியையும் கொண்டுவந்தான். அவன் அவைகளைக் கொன்றான். அவையாவும் சுத்தமான பலிகளாயிருந்தன. அவைகளை இரண்டாகப் பிளந்து, அவைகளை அங்கே வைத்தான். அதன்பின்னர் அவன் இரண்டு காட்டுப் புறாக்களைக் கொண்டு வந்து, அவைகளையும் அங்கே கீழே வைத்தான். அப்பொழுது ஆபிரகாம் அந்த உடல்களின்மேல் பறவைகள் இறங்காமல் கவனித்துக்கொண்டு, தேவன் வருவதற்காக காத்துக்கொண்டிருந்தான். “இப்பொழுது, கர்த்தாவே, பலியானது அங்கே உள்ளது, நீர் இதை எப்படி செய்யப் போகிறீர்? நீர் மனிதனை அவனுடைய சொந்த சித்தத்திற்கு எதிராக எப்படி இரட்சிக்கப்போகிறீர் என்பதை நான் அறியேன். நீர் இதை எப்படி செய்யப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது. கர்த்தாவே, உம்மால் அதை எப்படி செய்ய முடியும்?” 396 அப்பொழுது கர்த்தர், “இப்பொழுது ஆபிரகாமே கவனி. நீ ஒரு தீர்க்கதரிசி. நீ ஆவிக்குரியவனாயிருக்கிறபடியால், நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்வாய்” என்றார். 397 அப்பொழுது அவன், “சரி கர்த்தாவே, நான் காண விரும்புகிறேன்” என்றான். இப்பொழுது நான் இதை அப்படியே நாடக வடிவில் கூறிக்கொண்டிருக்கிறேன். 398 “ஆகையால், ஆபிரகாமே இப்பொழுது இங்கு வா, இங்கு அமர்ந்து பறவைகள் அந்த உடல்களில் இறங்காமல் கவனித்துக் கொள்” என்றார். ஆகையால் அவன் சூரியன் அஸ்தமிக்கத் துவங்கும் வரையில் பறவைகளைத் துரத்தினான். 399 முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, தேவன் இறங்கி வந்தார். அவர் இறங்கி வந்தபோது, ஆபிரகாம் உறங்கத் துவங்கினான். தேவன், “ஆபிரகாமே, நான் உனக்கு நித்திரை வருவிக்கப் போகிறேன்” என்றார். 400 இப்பொழுது பிரமாணத்தை கடைப்பிடிக்கிற நண்பனே கவனி. பாருங்கள், தேவன் ஆபிரகாமை முழுவதுமாக காட்சியிலிருந்து எடுத்துவிட்டார், அவனுக்கு அதில் செய்வதற்கு ஒன்றுமேயில்லாதிருந்தது. அந்த விதமாகவே அவர் உங்களைத் தெரிந்துத் கொண்டார். நீங்களோ, “ஓ, நான் தேவனைத் தேடினேன்” என்றீர்கள். நீங்கள் தேவனைத் தேடவில்லை. 401 தேவன் உங்களைத் தேடினார், “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” புரிகிறதா? 402 அது தேவன் உங்களைத் தேடுகிறதாய் உள்ளதேயன்றி, நீங்கள் தேவனைத் தேடுவதல்ல. நீங்கள் அதை ஒருபோதும் செய்யவேயில்லை. உங்களுடைய சுபாவம் தவறாயிருக்கிறது. நீங்கள் ஒரு பன்றியாய் இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நீங்கள் ஒரு பன்றிப்பட்டியில் வாழ்கிறீர்கள். நீங்கள் அறிந்துள்ளதெல்லாம் அது தான். நீங்கள் அதை விரும்புகிறீர்கள். மதுபானம் அருந்திவிட்டு, சுற்றிலும் எச்சில் வழிய, அடுத்த மனிதனுடைய மனைவியோடு சுற்றித் திரிந்துகொண்டு, நீங்கள் செய்ய முடிந்த ஒவ்வொரு பொல்லாத காரியத்தையும் செய்கிறீர்கள். அது நல்லதாக உங்களுக்குத் தென்படுகிறது. அப்பொழுது நீங்கள், “ஓ, சகோதரனே, நாங்கள் ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!” என்கிறீர்கள். அது நல்லது என்றும் நீங்கள் நினைக்கிறீர்களே! 403 ஆனால் தேவன் உங்களுடைய இருதயத்தைத் தட்டுகிறார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டுகிறார்—ஆசி.] அதுவே மாற்றுகிறது. நீங்கள் தேவனைத் தட்டுகிறதில்லை. தேவன் உங்களைத் தட்டுகிறார். ஆதாம் ஒருபோதும் தேவனுடைய இருதயத்தைத் தட்டவேயில்லை. தேவன் ஆதாமினுடைய இருதயத்தைத் தட்டினார். நீங்கள் ஒரு ஆதாமின் குமாரனாயிருக்கிறீர்கள். அது உண்மை. ஆதாம் ஒரு தேவனுடைய குமாரனாயிருப்பதற்கு முன்னர், தேவன் அவனுடைய இருதயத்தை தட்ட வேண்டியதாயிருந்தது. நீங்கள் ஒரு தேவனுடைய குமாரனாவதற்கு முன்னே, தேவன் உங்களுடைய இருதயத்தை தட்டியிருக்க வேண்டும். 404 அப்பொழுது ஆபிரகாம் உறங்கச் சென்றான். அவன் உறங்கச் சென்றபோது, அவன் கண்டிருந்த முதல் காரியம் என்னவாயிருந்தது? உண்மையாகவே பயங்கரமான, பயமுறுத்துகின்ற, திகிலான ஒரு அந்தகாரம். அது முழு மானிட வர்க்கத்தின் மீதும் வருகின்ற மரணமாயிருக்கிறது. அதன்பின்னர் அதைவிட சற்று தூரமாக அவன் நோக்கிப் பார்த்தபோது, அவன் ஒரு புகைகிற சூளையைக் கண்டான். புகை உண்டாவதற்கு முன்னர், நெருப்பு உண்டாயிருக்க வேண்டும், அந்தக் காரணத்தினால்தான் நான் நகரம் ஒரு எரிகின்ற இடமாக உள்ளது என்று நான் நம்புகிறேன். சரி. 405 நாம் பாவிகளாயிருக்கிற காரணத்தால், நாம் ஒவ்வொருவரும் மரணத்திற்குட்பட்டிருக்கிறோம் என்றும், நாம் ஒவ்வொருவரும் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் காண்பித்தார். 406 இப்பொழுது, ஆனால், அதற்கப்பால், அவன் ஒரு சிறிய வெள்ளை ஒளியைக் கண்டான். 407 இந்த சிறிய, வெள்ளை ஒளி, அது என்ன ஒளியாய் உள்ளது? அந்த வெள்ளை ஒளி என்னவாயிருந்தது? அது அக்கினி ஸ்தம்பமாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சென்றது. அந்த அக்கினி ஸ்தம்பமே தமஸ்குவிற்கு போகும் வழியில் பவுலைச் சந்தித்தது. அந்த அக்கினிஸ்தம்பமே பேதுருவை சிறைச்சாலையிலிருந்து வெளியேக் கொண்டு வந்தது. அந்த அக்கினி ஸ்தம்பமே இன்றிரவு இங்கே உள்ளது. 408 அந்த நித்திய, நித்திய தேவன், அவர் தாமே இந்த பிளந்த பலிகளின் நடுவே முன்னும் பின்னும் ஒவ்வொன்றின் நடுவேயும் நடந்தார், (ஓ, என்னே). “ஆபிரகாமே இந்த விதமாகத்தான் நான் அதைச் செய்யப்போகிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்று என்னைக் கவனி. நான் இங்கே ஒரு உடன்படிக்கையை செய்துக்கொண்டிருக்கிறேன். நான் அதற்கு ஒரு ஆணையிட்டு, அந்த சந்ததியின்படி, நான் ஒரு பரிந்துபேசுபவரை எழுப்புவேன். நான் மரணத்தோடு ஒரு உடன்படிக்கை பண்ணுவேன். நான் மரணத்தை மாம்சத்தில் ஆக்கினைக்குட்படுத்துவேன், ஏனென்றால் நானே அதை எடுக்க வருவேன். ஆபிரகாமே,” “ஆபிரகாமே உன்னுடைய சந்ததியினூடாக அது உண்டாகும். உன்னுடைய சந்ததியினூடாக நீ உலகத்தின் தகப்பனாயிருப்பாய். உன்னோடு நான் இந்த வாக்குத்தத்தத்தைச் செய்வது மாத்திரமல்ல, உனக்குப் பின்னும் உன்னுடைய சந்ததியோடு நான் இந்த வாக்குத்தத்ததைப் பண்ணுவேன்” என்றார். அவர் ஒவ்வொருவரும் எப்படியிருப்பார்கள் என்பதை அறிந்திருந்தார். “அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதல்ல, ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதாகும். ஆபிரகாமே நான் அதைச் செய்யப் போகிறேன். நான் ஆதாமை நம்பினேன், அவன் தன்னுடையதை முறித்துப் போட்டான். ஒவ்வொருவரும் தங்களுடையதை முறித்துவிடுகிறார்கள். ஆனால், ‘நான் அதைக் காத்துக்கொள்வேன்’ என்று நான் இதனோடு என்னைக் கொண்டு, என்னைக்கொண்டே ஆணையிடுவேன்” என்றார். ஆமென். ஆமென். ஆமென். 409 நாம் ஒரு உடன்படிக்கைப் பண்ணும்போது, நாம் என்ன செய்கிறோம்? நான், “சகோதரன் நெவில்…” என்று கூறுகிறேன். இப்பொழுது இதை அப்படியே ஒரு நிமிடம் கவனியுங்கள். நான், “சகோதரன் நெவில், நான் என்ன செய்வேன் என்று உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் நாளை இரவு வரையில்…அடுத்த இரவு, புதன் கிழமை இரவு வரையில் பிரசங்கித்தால், நான் புதன் கிழமையிலிருந்து ஞாயிறு வரை பிரசங்கிப்பேன்” என்று கூறுவேன். [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] “நீங்கள் அந்த ஒப்பந்தத்தைச் செய்கிறீர்களா?” 410 “ஆம் ஐயா.” 411 இந்த விதமாகத்தான் நாம் அதைச் செய்கிறோம். “பையனே, கரத்தைக் குலுக்கு.” [சகோதரன் பிரான்ஹாமும், சகோதரன் நெவிலும் கரங்களை குலுக்குகிறார்கள்—ஆசி.] அது தான் இது. அது அமெரிக்காவில் உள்ள ஒரு உடன்படிக்கையாயுள்ளது. அந்த விதமாகத்தான் நாம் ஒரு உடன்படிக்கைப் பண்ணுகிறோம். 412 இப்பொழுது, ஜப்பானில் அவர்கள் எப்படி ஒரு உடன்படிக்கைப் பண்ணுகிறார்கள்? நாம், “நீங்கள் இன்ன-இன்னதைச் செய்யுங்கள், நான் இன்ன-இன்னதைச் செய்வேன்” என்று கூறி உடன்படிக்கைப் பண்ணுகிறோம். நாம் கொஞ்சம் உப்பை அள்ளி எடுத்துக்கொள்வோம், ஏனென்றால் உப்பு சாரமுள்ளதாயிருக்கிறது. நாம் உப்பை எடுத்து, நான் அதை சகோதரன் நெவிலின் மீது எறிகிறேன், சகோதரன் நெவில் உப்பை எடுத்து அதை என் மீது எறிகிறார், இவ்வாறுதான் ஜப்பானில் செய்கிறார்கள். அது ஒரு உறுதி செய்யும் உடன்படிக்கையாயுள்ளது. 413 டேவிட் லிவிங்ஸ்டோன் அவர்கள் ஆப்பிரிக்க கருப்பருடைய தேசத்திற்குள் செல்ல, அவரோடு எப்படி ஒரு உடன்படிக்கைப் பண்ணினார்? அவர் அங்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க, தங்களுடைய ஊழியத்தைச் செய்ய அங்கே கடந்து செல்லக் கூடுமா என்று அந்த தலைவரிடத்தில் போய் பேசினார். அப்பொழுது அவர்கள் ஒரு கண்ணாடி குடுவையில் மதுபானத்தை எடுத்துக் கொண்டனர். இதுதான் ஆப்பிரிக்காவில் கருப்பரோடு செய்த உடன்படிக்கையாகும். அவர்கள் ஒரு கண்ணாடிக் குடுவையில் மதுபானத்தை வைத்திருந்தனர். அப்பொழுது அந்த கருப்பர் இனத் தலைவன் தன்னுடைய சொந்த நரம்புளை பிடுங்கி, அந்த இரத்தத்தை மதுபானம் இருந்த இந்த கண்ணாடிக் குடுவையில் சிந்தவிட்டான். டேவிட் லிவிங்ஸ்டோன் அவர்களும் தன்னுடைய சொந்த நரம்புகளைப் பிடுங்கி, அந்த இரத்தத்தை மதுபானம் இருந்த இந்த கண்ணாடிக் குடுவையில் சிந்தவிட்டார். பின்னர் அவர்கள் அதைக் கலக்கினர். அப்பொழுது லிவிங்ஸ்டோன் அதில் பாதியைக் குடித்தார், அதன்பின்னர் அந்த கருப்பர் இனத் தலைவனும் மற்ற பாதியைக் குடித்தான். அப்பொழுது அவர்கள் ஒருவருக்கு ஒருவர், அவர் அந்த கருப்பர் இனத் தலைவரோடு ஒரு வெகுமதியை மாறி மாறி கொடுத்துக்கொண்டனர். அப்பொழுது டேவிட் லிவிங்ஸ்டோன், “நீர் என்னிடத்திலிருந்து என்னக் கேட்கிறீர்?” என்று கேட்டார். 414 அதற்கு அவர், “நீர் அணிந்திருக்கும் வெள்ளை மேற்சட்டையைத் தாரும்” என்றான். ஆகையால் லிவிங்ஸ்டோன் தன்னுடைய மேற்சட்டையைக் கழற்றி, அதை அந்த கறுப்பர் இன தலைவனிடத்தில் கொடுத்தார். அப்பொழுது அவன், “நீர் என்னக் கேட்கிறீர்?” என்று கேட்டான். 415 அப்பொழுது இவர், “நீர் உம்முடைய கையில் வைத்துள்ள அந்த புனிதமான ஈட்டியைத் தாரும்” என்றார். காரணம் அவர் அதைக் கொண்டு அந்த தேசத்திற்குள் செல்ல முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் அந்த ஈட்டியை எடுத்துக் கொண்டார். அவர்கள் சகோதரர்களாயிருந்தனர், ஏனென்றால் அவர்கள் ஒரு உடன்படிக்கையைச் செய்திருந்தனர். 416 அவர் அங்கு புறப்பட்டுச் சென்றபோது, அந்த மரபின மக்கள் அவரைக் கொல்ல ஓடினர். அப்பொழுது அவர் அந்த புனிதமான ஈட்டியை உயர்த்திப் பிடித்தார். அவர் அதை உயர்த்தினபோது, அவர்கள் அதை நோக்கிப் பார்த்து, “ஓ, ஓ நாம் அந்த மனிதனைத் தொட முடியாது” என்று அவர்கள் கூறினர். ஏன்? “அவர் வெள்ளைக்காரராய், நாம் இதற்கு முன்பு அவரை ஒருபோதும் காணாதிருந்தாலும், அவர் ஒரு உடன்படிக்கை சகோதரனாய் இருக்கிறார்.” அவர்கள் அவரை காணும் வரையில் அவர்கள் கருப்பாயிருந்தனர் என்பதை அவர்கள் ஒருபோதும் அறியாதிருந்தனர். அவர்கள் அப்படிப்பட்டவரை அதற்கு முன் ஒருபோதும் கண்டதேயில்லை. “ஆனால் அவர் ஒரு உடன்படிக்கை சகோதரனாயிருக்கிறார். அவர் தன்னுடைய கையில் தலைவருடைய ஈட்டியை வைத்திருக்கிறார்” என்றனர். 417 நம்மீது உள்ள பரிசுத்த ஆவியின் வல்லமையினால், கர்த்தராகிய இயேசுவின் உடன்படிக்கையின் இரத்தத்தைப் பாணம்பண்ணுவது இன்றைக்கு என்ன ஒரு அழகான காட்சியாய் உள்ளது! நாம் இயேசுவின் நாமத்தில் முன்னோக்கிச் செல்கிறோம், அதற்குச் சொந்தமானவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். இது தலைவரின் புனிதமான ஈட்டியாகும். எப்படி அந்த உடன்படிக்கை உள்ளது என்று பார்த்தீர்களா? 418 கிழக்கத்திய பகுதிகளில் அந்த நேரத்தில் அவர்கள் அதை எப்படி செய்தார்கள்? அவர்கள் ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டனர். அவர்கள் ஒரு மிருகத்தைக் கொன்று, அதை இரண்டாகப் பிளந்து, அதற்கிடையில் நின்றனர். அந்த பிளந்த மிருகத்திற்கு இடையில் இரண்டு மனுஷர் நின்றனர். அவர்கள் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர். “நான் இதைக் காத்துக்கொள்ளத் தவறினால், நான் இதைச் செய்ய தவறினால், ஏன்? இதை, இன்ன-இன்னின்னதை செய்யத் தவறினால், என்னுடைய சரீரம் இந்தச் செத்த மிருகத்தைப்போல இருக்கும். என்னுடைய சரீரம் இந்தச் செத்த மிருகத்தைப் போல இருக்கும்” என்றனர். அவர்கள் அதைச் செய்யும்போது, அவர்கள் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்போது, இதற்கு இடையில் நின்று, ஒரு ஆணையிட்டு, அவர்கள் அதைச் செய்வதாக ஆணையிட்டுக்கொள்வர். அவர்கள் ஒரு காகிதத்தைக் கிழித்து, தனித்தனி துண்டாக்கி, அதில் ஒரு துண்டை ஒருவருக்கு கொடுத்து, மற்றொன்றை மற்றொருவர் எடுத்துக்கொள்வர். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் சந்திப்பர். அவர்கள் அந்த ஆணையுறுதியை காத்துக்கொள்ளத் தவறினால், அவர்களை மரணத்துக்கேதுவாய் மரிக்கவிடுவர், அப்பொழுது அந்த செத்த மிருகங்களைப் போல இருப்பர். சரி. 419 அந்த மூன்று மிருகங்களையும் நீங்கள் கவனித்தீர்களா? பரிபூரணம்; ஆட்டுக்குட்டி, வெள்ளாடு…மூன்று பரிபூரண பலி. ஆட்டுக்குட்டி என்னவாயிருந்தது?…அந்தக் காட்டுப்புறா என்னாவாயிருந்தது? அந்த இரண்டு காட்டுப்புறாக்கள் எதைப் பொருட்படுத்தியிருந்தன? இரண்டு காட்டுப் புறாக்களும் இரட்சிப்பிற்காகவும், சுகமளித்தலுக்காகவும் அங்கே பலியிடப்பட்டிருந்தன…அதற்குள் சென்ற அந்த…புரிகிறதா? பாவநிவிர்த்தி வித்தியாசமாக்கப்பட்டது, ஆனால் சுகமளித்தல் அதேவிதமாகத் தொடர்ந்தது, ஆகையால் இரட்சிப்பும் அதேவிதமாக தொடர்ந்தது. இரண்டு காட்டுப் புறாக்களும் துண்டிக்கப்படவில்லை, எனவே அவை இரண்டையும் சுட்டிக்காட்டிப் பொருட்படுத்தின. இரட்சிப்பு… “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.” அவைகள் துண்டிக்கப்படாமல் ஒருபுறமாக வைக்கப்பட்டன. ஆனால் உடன்படிக்கையில், மிருகத்தின் பாகங்கள் துண்டிக்கப்பட்டிருந்தன (அவைகள் மூன்றுமே) உங்களுக்குப் புரிகிறதா? அப்பொழுது அவர்கள் அதைச் செய்தபோது, அவர்கள் அந்தக் காகிதத்தைக் கிழித்து உடன்படிக்கையைச் செய்து கொண்டனர். 420 தேவன் ஆபிரகாமினிடத்தில் என்னக் கூறிக்கொண்டிருந்தார் என்பதைக் கவனியுங்கள். “கல்வாரியில், உன்னுடைய சந்ததியின்படி கல்வாரியிலே, உன்னிடத்திலிருந்து ஈசாக்கு தோன்றுவான். ஈசாக்கிலிருந்து இன்னார்-இன்னார், யாக்கோபு தோன்றுவான். யாக்கோபிலிருந்து யோசேப்பு தோன்றுவான். யோசேப்பிலிருந்து தொடர்ந்து தோன்றிக் கொண்டே, தோன்றிக் கொண்டே, தோன்றிக் கொண்டே வழிவழியாய் தொடர்ந்து வந்து முடிவிலே அந்த நீதிபரரின் வித்து தோன்றுமே!” என்றார். அவருடைய… 421 பவுல் இங்கே அதைக் குறித்துப் பேசுகையில், நம்முடைய கர்த்தர் தோன்றின கோத்திரத்தைக் குறித்து மோசே ஒன்றும் சொல்லவில்லை என்று கூறுகிறான். ஒரு ஆசாரியத்துவத்திலிருந்து வெளியே வருதல். “நம்முடைய கர்த்தர் யூதாக் கோத்திரத்தில் தோன்றினார்.” லேவியிலிருந்து அல்ல, ஏனென்றால் அவர்கள் மாம்சபிரகாரமாக பிரமாணத்தைக் கடைப்பிடிப்பவர்களாயிருந்தனர். ஆனால் நம்முடைய கர்த்தர் யூதாவிலிருந்து தோன்றினார். மகிமை! அங்குதான் காரியமே உள்ளது. அங்கே தான் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்தது! 422 நாம் முடிக்கையில், இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். கல்வாரியிலே, தேவன் இறங்கி வந்து, தம்முடைய சொந்த குமாரனுடைய சரீரத்தை எடுத்துக்கொண்டார், அதில் அவர் வாசம் செய்திருந்தார், அவர் அதை கல்வாரியிலே இரண்டாக கிழித்தார். அவருடைய இரத்தம் சிந்த, காயப்பட்டு, துண்டிக்கப்பட்டார், அங்கே ஈட்டியானது அவருடைய விலாவிலே பாய்ந்து அவரை இரண்டாகக் கிழிக்க, அவருடைய இரத்தமோ பீறிட்டடித்தது. அப்பொழுது அவர், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார். அதன்பின்னர் அவர் தம்முடையத் தலையைச் சாய்த்தார். பூமி அதிர்ந்து, மின்னல் மின்னிட, இடி முழங்கினது. அப்பொழுது தேவன் தம்முடைய நித்திய உடன்படிக்கையை எழுதிக் கொண்டிருந்தார். 423 வாரத்தின் முதலாம் நாளிலே அவர் அவருடைய மரித்த சரீரத்தை கல்லறையிலிருந்து எடுத்து, அதை பரலோகத்திற்குக் கொண்டுவந்து, அவரை பிராதான ஆசாரியராக வீற்றிருக்கச் செய்தார், ஒரு நினைவுச் சின்னமாக, அங்கே என்றென்றைக்கும் பரிபூரணமாக வீற்றிருக்கிறார். அவர் அந்த சரீரத்திலிருந்து கிழித்த ஆவியை திரும்பவும் சபையின் மீது அனுப்பினார். அந்த சபையானது அந்த சரீரத்தில் இருந்த அதே ஆவியை உடையதாயிருக்க வேண்டும், இல்லையென்றால் அது உயிர்த்தெழுதலில் அதனோடு இணையாது. அந்த இரண்டு துண்டுகளும் பரிபூரணமாக ஒன்றுசேர்ந்து வர வேண்டும். இந்த சபையானது பரிபூரணமாயிருக்கவில்லையென்றால், சரியாக கிறிஸ்துவுக்குள்ளிருந்த அதே ஆவி இல்லையென்றால், நீங்கள் ஒருபோதும் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லவேமாட்டீர்கள். 424 சகோதரனே, அங்குதான் நித்திய உடன்படிக்கையே உள்ளது. உங்களுடைய சொந்த இருதயத்தில் என்ன இருந்தாலும், நீங்களாகவே அதை தேடுங்கள். கர்த்தரை நேசியுங்கள். உண்மையாகவே நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நிச்சயமுடையவர்களாயிருங்கள். அதன்பேரில் மற்றொரு நல்வாய்ப்பினை எதிர்பார்க்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் சூதாடிக்கொண்டிருக்கிறீர்கள். ஓ, நீங்கள், அமெரிக்க ஜனங்களாகிய நாம் சூதாட விரும்புகிறோம், ஆனாலும் நீங்கள் அதன்பேரில் சூதாடாதீர்கள். நீங்கள் சரியாயிருக்கிறீர்கள் என்று நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருங்கள், நீங்கள் சபையில் சேர்ந்து கொண்டீர்கள் என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் நீங்கள் உண்மையாகவே மறுபடியும் பிறந்துள்ள காரணத்தால், கிறிஸ்து, பரிசுத்த ஆவி என்னும் நபராக உங்களண்டை வந்திருக்கிறார். 425 இப்பொழுது, நான் முடித்துக் கொண்டிருக்கிறபடியால், இது அப்படியே மிகுதியாய் பாராட்டு தெரிவிக்கிறதாய் இருக்கட்டும். இயேசு கிறிஸ்துவுக்குள்ளிருந்த அதே ஆவி நமக்கு மத்தியில் இருப்பதையும், அவர் இங்கே பூமியின்மேல் இருந்தபோது அவர் செய்த அதேக் காரியங்களைச் செய்கிறதையும் காண நாம் எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டும். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. 426 கர்த்தாவே, இது ஒரு மகத்தான நாளாய் இருந்து வருகிறது. நான் எப்பொழுதும் செய்கிறது போன்றே நான் தவறிப்போகிறதை நான் உணருகிறேன். கர்த்தாவே, என்னால் அதை சரியாக சுட்டிக்காட்ட முடியவில்லை. நீர் என்னுடைய முட்டாள்தனமான வழிகளை எனக்கு மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ, நான் உமக்கு முன்பாக என்னுடைய பாவங்களை அறிக்கை செய்து, இரக்கத்திற்காக வேண்டுகிறேன். ஆரோனுடைய முறைமையின்படி, நியாய்ப்பிரமாண சட்டதிட்ட காரியங்களின்படி உண்டாகாமல், பரலோகத்தில் அங்கே தேவனுடை வலதுபாரிசத்தில் நின்று கொண்டிருக்கிற ஒரு மகத்தான பிரதான ஆசாரியன் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் அவர் அங்கே வீற்றிருந்து, தேவனுடைய கிருபையானது முன்நோக்கிப் பார்த்தபடியால், உலகத்தோற்றத்துக்கு முன்னரே, என்னை இங்கே உலகத்தில் கண்டு, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு என்னைத் திரும்பக் கொண்டுவரும்படிக்கு என்னுடைய பாவங்களுக்காக மரித்தார். பிதாவே, நான் இதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். 427 காரணம், தேவன் நித்தியமானவராயிருப்பதுபோல, இந்த ஆவியானது இப்பொழுது உம்முடைய ஜனங்களுக்குள் நித்தியமாக ஆளுகை செய்கிறது. “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனை என்றென்றும் ஜீவனை, நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை.” அவைகள் அங்கே நியாயத்தீர்ப்பிலே ஒருபோதும் இருக்காது. அவைகள் நியாந்தீர்ப்புகளைக் கடந்து, மகிமைக்குள்ளாக சென்று விட்டன, “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.” கர்த்தாவே, அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். 428 இன்றிரவு இங்குள்ள எவரேனும் இதுவரை உண்மையான உடன்படிக்கையின் இரத்தத்தை ஒருபோதும் பாணம்பண்ணாதிருந்தால், அது என்ன பொருட்படுத்துகிறது என்பதை அறியாமலிருந்தால், மறுபடியும் பிறப்பதென்பது எதைப் பொருட்படுத்துகிறது என்பதை அறியாதிருந்தால், கிறிஸ்துவோடு தங்களுடைய இருதயத்தில், அல்லது அவளுடைய இருதயத்தில் ஒரு உண்மையான ஐக்கியங்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் காத்திருந்து இந்த தருணத்தை அளிக்கையில் அவர்கள் அவரை இப்பொழுதே ஏற்றுக்கொள்வார்களாக என்றே நான் ஜெபிக்கிறேன். அந்த நாளிலே நாங்கள் உண்மையான வெளிச்சத்தில் சுவிசேஷத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வோம் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். 429 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், கிறிஸ்துவண்டை உங்களுடைய கரங்களை எந்த ஒரு நபராவது உயர்த்தி, “தேவனாகிய கிறிஸ்துவே, என்னிடத்தில் இரக்கமாயிரும். நான் உம்முடைய அபாத்திரமான ஊழியக்காரனாயிருக்கிறபடியால், இப்பொழுதே நான் பரிசுத்த ஆவியை என்னுடைய இருதயத்திற்குள் பெற்றுக் கொள்வேனாக. எனக்கு உறுதியையும், எனக்கு உண்மையாகவே தேவைப்படுகிற அன்பையும் தாரும்” என்று கூறுவீர்களா? நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லையென்றால், உங்களுடைய கரங்களை அவரண்டை அப்படியே உயர்த்தி, “கர்த்தாவே, இதுவே நான் அதை வாஞ்சிக்கிறதற்கு ஒரு அடையாளமாய் இருக்கிறது” என்று கூறுவீர்களா? நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? அங்கே பின்னால் உள்ள பெண்மணியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை இங்கே ஆசீர்வதிப்பாராக. ஐயா, இங்குள்ள உங்களையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடிருப்பாராக. அது அருமையாயுள்ளது. இங்கே கடைசியில் உள்ள இந்த மனிதனை, என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரேனும் இருக்கிறார்களா? நாம் முடிப்பதற்கு சற்று முன்னர் அப்படியே ஒரு சில நிமிடங்கள் காத்திருப்போம். அங்கே பின்னால் உள்ள மகனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறுயாரேனும் உண்டா? 430 “நான் இப்பொழுது வாஞ்சிக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, நான் வாஞ்சிக்கிறேன். நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். என்னுடைய சிந்தையில் என்ன உள்ளது என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர். நீர், ‘தேவனுடைய ஆவியானது ஜீவனும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், எலும்பின் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது’” என்றீர். அதைக் குறித்து சிந்தியுங்கள். அவர் உங்களுடைய நினைவுகளையும், உங்களுடைய நோக்கங்களையும் அறிந்திருக்கிறார். 431 நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “தேவனே, இப்பொழுதே என்னிடத்தில் இரக்கமாயிரும். நான் தவறாயிருக்கிறேன் என்பதை நான் அறிந்துகொண்டேன் என்பதை நீர் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை தெளிவாக உணருகிறேன், ஆனால் நான் சரியாயிருக்க விரும்புகிறேன்,” என்று கூறுங்கள். சரி, நாம் நம்முடைய தலைகளை அப்படியே தொடர்ந்து வணங்கி, இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருக்கையில், அப்படியே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். நாம் அதைக் குறித்து துரிதப்பட வேண்டியதில்லை. எனக்காக பிளவுண்ட, காலங்களின் கன்மலையே, நான் உம்மில் என்னையே மறைத்துக்கொள்வேனாக; உம்முடைய காயப்பட்ட பக்கவாடிலிருந்து… தண்ணீரும், இரத்தமும் வந்து… பாவத்திற்கான… இரட்டிப்பான சுகம்! அவர் இரண்டு மாறாத விசேஷங்களைக் கொண்டு அதை ஆணையிட்டார். நான்…இருக்கையில், கோபத்திலிருந்து இரட்சித்து, என்னை சுத்தமாக்கும். 432 ஓ, கர்த்தாவே, நாங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிற இந்த சுவாசங்கள் விரைந்தோடிக்கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் எல்லோருமே அறிந்துகொள்ள இப்பொழுதே அருள் புரியும். நாங்கள் இன்னும் எத்தனை முறை சுவாசிப்போம் என்பதை நாங்கள் அறியோம். அவையாவுமே உம்முடைய மகத்தான ஆலோசனையாயுள்ளது. அது உம்மாலே தீர்மானிக்கப்படுகிறது. ஓ, எங்களிடத்தில் இரக்கமாயிரும். கர்த்தாவே, தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களை, அவர்களை குறிப்பிட்டுக் கூற வேண்டியதில்லை. நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறீர். ஆனால் நான் இந்த பரிந்து பேசும் ஜெபத்தை அவர்களுக்காக ஏறெடுக்கிறேன். நீர் அவர்களுடைய இருதயத்திலிருந்து ஆக்கினைத்தீர்ப்பை எடுத்துப்போட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் இப்பொழுதே தைரியமாக சிங்காசனத்தண்டை வருவார்களாக. தைரியமாக தேவனுடைய சிங்காசனத்தண்டை நடந்து சென்று, தேவனால் அருளப்பட்ட தங்களுடைய சிலாக்கியத்தை உரிமை கோருவார்களாக. நீரே அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்த காரணமாயிருந்தீர். அவர்கள் தாங்களாகவே அதை செய்திருக்க முடியாது. தேவனே, நீர் இதை இயேசுவின் நாமத்தில் அருள் வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். …என்னையே உம்மில்; இப்பொழுது, அப்படியே அவரை இப்பொழுது ஆராதிப்போமாக. உம்முடைய காயப்பட்ட பக்கத்திலிருந்து பாய்ந்த தண்ணீரும்…(ஓ, என்னே!) பாவத்திலிருந்து இரட்டிப்பான குணமாயிருக்கும், கோபத்திலிருந்து இரட்சித்து, என்னை சுத்தப்படுத்தும். 433 இப்பொழுது எத்தனைபேர் உண்மையாகவே நலமாக உணருகிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்தி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள். [சபையார், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்கின்றனர்.—ஆசி.] ஓ, அவர் அற்புதமானவராயிருக்கிறாரே! ஓ! ஊற்றண்டையிலே இடம் உண்டு. சகோதரி கெர்டி, உங்களுக்கு அந்தப் பாடல் தெரியுமா? நாம் பாடுவோம். எத்தனைபேர் அந்தப் பாடலை விரும்புகிறீர்கள்? இப்பொழுது நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் ஒரு ஞானஸ்நான ஆராதனையை நடத்தப் போகிறோம்.[சகோதரன் பிரான்ஹாம் சகோதரன் நெவிலினிடத்தில் பேசுகிறார்—ஆசி.] நீங்கள் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்போகிறீர்களா? சரி. இடம், ஆம், இடம் உண்டு, உனக்காக ஊற்றண்டையிலே இடம் உண்டு; இடம், இடம்… 434 சரி. ஞானஸ்நானத்திற்காக அந்த நபர்களில், ஆண்கள் இந்த அறைக்கு செல்வார்கள், ஸ்திரீகள் இந்த ஒன்றிக்கு செல்வார்கள், சரி, அவர்கள் ஸ்தோத்தரிக்கப்பட்ட நம்முடைய கர்த்தரின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவிருக்கின்றனர். …உனக்கு நல்ல, உனக்காக ஊற்றண்டையிலே இடம் உண்டு; தேவன் எனக்கு நல்லவராகவே இருந்து வருகிறார், உனக்காக ஊற்றண்டையிலே இடம் உண்டு. 435 இப்பொழுது ஒவ்வொருவரும் பாடுவோம். இடம், இடம், ஆம், இடம் உண்டு, ஊற்றண்டையிலே உனக்காக இடம் உண்டு; ஓ, இடம், இடம், ஆம், இடம் உண்டு, ஊற்றண்டையிலே உனக்காக இடம் உண்டு. 436 ஓ, நான் அந்த பழைய பாடலை விரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா? ஊற்றண்டையிலே உனக்காக இடம் உண்டு; ஓ, இடம், இடம், ஏராளமான இடம் உண்டு, ஊற்றண்டையிலே இடம் உண்டு. 437 இப்பொழுது, ஞானஸ்நானத்திற்காக ஆயத்தம் செய்யும்படிக்கு மூப்பர் உள்ளே சென்றிருக்கையில், நான் ஜனங்களுக்கு அதை விளக்கிக் கூற விரும்புகிறேன். உதவிக்காரர்களால் நான் பேசுவதை அறையில் கேட்க முடிகிறதா என்று அவர்கள் சிலரிடத்தில் கேட்க உள்ளேன். அவர்கள் ஆயத்தமாகி என்னிடத்தில் வந்து கூறும்போது, எங்களால் மின்சார ஒலிப்பெருக்கிகளை அகற்றிவிட முடியும். நீங்கள் யாவரும் இதைக் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏறக்குறைய பத்து நிமிடங்கள் கழித்து, சபை கலைந்து செல்லும். 438 இப்பொழுது நான் உங்களுக்காக சில புனிதமான வேதவாக்கியங்கிகளை வாசிக்க விரும்புகிறேன். நான் அவைகளை அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். நான் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் 12-வது வசனத்திலிருந்து துவங்கி வாசிக்க விரும்புகிறேன். 439 இப்பொழுது, நீங்கள் பரிசுத்த லூக்கா இல்லை பரிசுத்த மத்தேயு 16-வது அதிகாரத்தில் கவனித்துப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அந்த அதிகாரத்தில் தான் இயேசுவானவர் மலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் என்று நான் நினைக்கிறேன். அவர்கள்…அவருடைய சீஷர்களிடத்தில், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். 440 “அவர்களில் சிலர், ஏன், நீர் ‘எலியா’, என்றனர். சிலர், நீர்—நீர் ஒரு ‘தீர்க்கதரிசி’ என்று கூறுகிறார்கள். சிலர், நீர் இதுவாய் இருக்கிறீர் அல்லது மற்றதாயிருக்கிறீர்” என்று கூறுகிறார்கள் என்றனர். 441 அப்பொழுது அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். 442 பேதுருவோ, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். அது சரியா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 443 இயேசு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீ ஒரு வேதபாட கருத்தரங்கில் இதை ஒருபோதும் கற்றறிந்து கொள்ளவில்லை” என்றார். மேலும், “பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்க்கொள்வதில்லை. பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்” என்றார். அது சரிதானே? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “நீ பூலோகத்திலே கட்டவிழ்பது எதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன். நீ பூலோகத்திலே கட்டுகிறது எதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டுவேன்” என்றார். அவர் அதைதான் குறிப்பிட்டுக் கூறினாரா? அப்படியில்லையென்றால், அவர் அதைக் கூறியிருந்திருக்கமாட்டார். இப்பொழுது, காலமானது உருண்டோடினபோது, பேதுரு ராஜ்ஜியத்திற்குரிய திறவுகோல்களை உடையவராயிருந்தார். 444 இப்பொழுது, கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள், நீங்கள் இதை இவ்வாறு நினைக்கலாம், அதாவது, “கத்தோலிக்க சபையானது பேதுருவின் மேல் கட்டப்பட்டுள்ளது” என்று கூறலாம். சரி, நாம் அதைக் குறித்துக் கண்டறியலாம். “அவர்கள் அந்த திறவுகோல்களை உடையவர்களாயிருந்தனர். கத்தோலிக்க சபையானது இன்னமும் அந்த திறவுகோல்களை வைத்திருக்கிறது.” 445 பேதுரு அந்த திறவுகோல்களைக் குறித்த காரியத்தில் என்ன செய்தார் என்பதை நாம் கண்டறிவோம், பாருங்கள், ஆகையால் நாம் அதைக் கண்டறிவோம். வேதம் பேதுருவினிடத்திலும், மற்ற அப்போஸ்தலர்களிடத்திலும் கூறியிருப்பதென்னவென்றால், “நீங்கள் உலகமெங்கும் போய், எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” என்று கூறியுள்ளது. அதாவது, நான் அதை அவ்வாறு…கூறலாம்…நான் என்னப் பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை யாராவது புரிந்து கொள்ளாமலிருக்கலாம். இயேசு அப்போஸ்தலர்களிடத்தில், “எவர்களுடைய பாவங்களை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, நானும் கூட அவர்களுக்கு மன்னிப்பேன். எவர்களுடைய பாவங்களை நீங்கள் மன்னிக்காதிருக்கிறீர்களோ, அது அவர்களுக்கு எதிராக பற்றியிருந்தால், நானும் கூட அதை அவர்களுக்கு எதிராக பற்றியிருக்கச் செய்வேன்” என்றார். அதைத்தான் இயேசு கூறினார். 446 கத்தோலிக்க சபையானது அதன் சார்பில் வற்புறுத்துகிறதைக் கவனியுங்கள். 447 ஆனால் அவர்கள் அதை எப்படி செய்தனர் என்பதை நாம் கண்டறிவோம். அப்பொழுது அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்பதை நாம் கண்டறிவோமானால், அப்பொழுது நாமும் அதை அந்தவிதமாக செய்ய வேண்டும். இப்பொழுது நாம் அதைக் கண்டறிவோமாக. 448 இது பெந்தேகோஸ்தே நாளில் நடந்தது. சபையானது அப்பொழுது தொடங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் எல்லோரும் மேலறையில் இருந்தனர். அங்கிருந்து வந்த மனுஷர்கள் பல்வேறுபட்ட பாஷைகளில் பேசினர். ஏன்? அங்கே வானத்தின் கீழிருந்த ஒவ்வொரு பாஷையும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. ஆங்கிலமும் கூட அங்கிருந்தது. வானத்தின் கீழிருந்த ஒவ்வொரு பாஷையும், அந்த நாளில் என்ன பாஷை பேசப்பட்டதோ, அவையாவும் அங்கே இருக்க வேண்டியதாயிருந்தது, இங்கே சற்று மேற்கொண்டு பார்ப்போம், அநேக பாஷைகளில் பேசினர், எப்படியாய் கிரேத்தரும், அங்கே சஞ்சரிக்கிறவர்களும், ரோமாபுரியில் யூதமார்க்கத்தமைந்தவர்களும், அரபியர்களும் மற்றுமுள்ள யாவரும் பேசினர்…இப்பொழுது, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஜனங்களிடத்தில் தெரிந்திருந்த பாஷைகளிலேயே பேசிக்கொண்டிருந்தனர். அந்நிய பாஷைகளில் அல்ல, ஆனால் ஒவ்வொருவரும் புரிந்து கொண்ட பாஷைகளில் பேசினர். பாவியாலும், அவிசுவாசியாலும் அவர்கள் என்னக் கூறிக்கொண்டிருந்தனர் என்பதைக் கேட்க முடிந்தது. “அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” 449 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது கேள்வியானது உண்டாகிறது. இப்பொழுது, “மற்றவர்களோ பரியாசம்பண்ணினார்கள்.” 12-வது வசனம், சரி. எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள். 450 மற்றவர்கள் அவர்களைக் குறித்துப் பரியாசம்பண்ணிக்கொண்டிருந்தனர். காரணம், அவர்கள் எப்படி பேசிக்கொண்டிருந்தனர்? அவர்கள் குடித்து வெறித்திருந்த மனுஷரைப் போல, குடித்திருந்த மனுஷரைப் போல தள்ளாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னக் கூறிக்கொண்டிருந்தனர் என்பதை அறியாமலே பேசிக்கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் அறிந்திராத பாஷையில் சபையோரிடத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தனர், ஆனால் சபையோர் அதை அறிந்திருந்தனர். புரிகிறதா? சரி. மற்றவர்களோ; இவர்கள் மதுபானத்தால் நிறைந்திருக்கிறார்கள்…என்றனர், அவர்கள் எப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். மற்றவர்களோ; இவர்கள்…நிறைந்திருக்கிறார்கள்…என்று கூறி…பரியாசம்பண்ணினார்கள். “ஆனால் பேதுரு…” பையனே கவனி! நீ திறவுகோல்களை வைத்துள்ளாய். அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்… இப்பொழுது, நினைவிருக்கட்டும், இது சபையின் முதல் துவக்க விழாவாயிருக்கிறது. யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. மதுபானக் கடைகளும் கூட அப்பொழுது திறக்கப்படாமலிருந்தன. புரிகிறதா? தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. …கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே…அதிசயங்களையும் காட்டுவேன். இப்பொழுது, இதுவோ திறவுகோல்களையுடைய ஒருவரான பேதுரு பிரசங்கித்துக் கொண்டிருத்தலாகும். இரத்தம்…அக்கினி…புகைக்காடாகிய… கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடபித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். ஒரு கடிந்து கொள்ளுகிற உரையா? அவன் திறவுகோல்களை உடையவனாயிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த… அங்குதான் காரியமே உள்ளது. அவர் எப்படி விடுவிக்கப்பட்டிருக்க முடியும்? ஏனென்றால் அந்தவிதமாய் இருக்க வேண்டுமென்று தேவன் முன்குறித்தார். புரிகிறதா? தேவனுடைய முன்னறிவு! 451 [ஒரு சகோதரன், தண்ணீர் ஞானஸ்நானத்திற்காக, “ஆயத்தம்” என்கிறார்.—ஆசி.] ஒரு நிமிடம், அப்படியே இருங்கள். நான் வேதவாக்கியங்களை வாசித்து முடிக்கும் வரையில் அப்படியே ஒரு நிமிடம் அவர்களைக் காத்திருக்கச் சொல்லுங்கள். …நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது. அவரைக் குறித்து தாவீது: கர்த்தரை எப்பொழுதும்…நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலது பாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்; ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க… நான் இதை ஏற்கெனவே பிரசங்கித்துவிட்டேன். …மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், நான் இதை பிரசங்கித்து முடித்துவிட்டேன். பேதுருவும் அதேக் காரியத்தைப் பிரசங்கித்தார். அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான். தீர்க்கதரிசி அதை முன்னதாகவேக் கண்டான். இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்களாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. (தீர்க்கதரிசி) நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உடகாருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகையினால் (இதற்கு செவிகொடுங்கள்) நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். அதுவே இதற்கு தீர்வாக வேண்டும். அது தீர்வாக வேண்டுமல்லவா? இதை அவர்கள் கேட்டபொழுது அதாவது அந்த பாவிகள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். 452 சரி, இங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அவன் என்ன வைத்திருந்தான்? திறவுகோலை, இராஜ்ஜியத்திற்கான திறவுகோல். இராஜ்ஜியம் எங்கே உள்ளது? அது உங்களுக்குள்ளே உள்ளது. அது சரிதானே? பரிசுத்த ஆவியே தேவனுடைய ராஜ்யமாயிருக்கிறது. நாம் அதை அறிந்துள்ளோம். நாம் இராஜ்ஜியத்திற்குள் பிறந்து, பிரஜைகளாக, பிரதிநிதிகளாக இருக்கிறோம். பாருங்கள். அவர் தன்னுடைய பக்கவாட்டில் திறவுகோல்களை உடையவராயிருக்கிறார். “நீர் அதைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்?” இதுவே முதன் முறையாக வாசலானது திறக்கப்பட்டதாயிருக்கிறது. 453 இப்பொழுது முதன் முறையாக பிரசங்கியாரிடம், திறவுகோலையுடைய ஒருவரிடம் கேட்கப்படுகிறது. அவர், “உன்னுடைய அதிகாரத்தின் பேரில் நில்” என்று கூறியிருந்தால், அது அதிகாரப்பூர்வமாயிருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். 454 “பூலோகத்திலே நீங்கள் கட்டுகிறது எதுவோ, நான் அதைப் பரலோகத்திலும் கட்டுவேன்.” சரி. “நீர் கூறுகிறது எதுவோ, நானும் அதேக் காரியத்தைக் கூறப்போகிறேன். நீ திறவுகோலை பெற்றுக்கொண்டாய்” சரி. அவர் வாசலுக்குள் திறவுகோலை நுழைக்கிறார். …நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி…சகோதரரே,… பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; அதுவே இதற்கு என்றென்றுமாய் தீர்வானது. எந்த நபர்களுமே, எந்த நேரத்திலுமே எப்போதும் அதற்கு முரண்பாடாயிருக்க முடியவில்லை. 455 தண்ணீரில் முழுக்கப்படுவதற்குப் பதிலாக கத்தோலிக்க சபையானது தோன்றி, அவர்கள் தெளித்தனர். இயேசுவின் நாமத்தை உபயோகிப்பதற்குப் பதிலாக அவர்கள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைத்” தெரிந்துகொண்டனர். அது வேதாகமத்தில் ஒருபோதும் போதிக்கப்பட்டிருக்கவேயில்லை. 456 அந்த நேரம் முதற்கொண்டு ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலேயே தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம்பண்ணப்பட்டனர். சிலர் இயேசுவுக்கு ஞானஸ்நானங்கொடுத்த யோவான்ஸ்நானகனால் முழுக்கு ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்தனர். அப்பொழுது பவுல் அவர்கள் அந்தவிதமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களிடம் கூறினான். எனவே அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர், அவர்கள் மீண்டும் வந்து இயேசுவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம்பண்ணப்பட வேண்டியதாயிருந்தது. அந்த வேதவாக்கியத்தை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அப்போஸ்தலர் 19-ம் அதிகாரம். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. காரணம் பரலோக ராஜ்ஜியம் பரலோகத்தில் அதிகாரப் பூர்வமாயிருக்க வேண்டும் என்பதற்கு இயேசு கிறிஸ்துவின் ஆணையினாலே மற்றொரு விதத்தில் முத்திரையிடப்பட்டது. …நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும், பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வாத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி: ஆமென். நாம் ஜெபம் செய்வோமாக. 457 பிதாவாகிய தேவனே, இன்றிரவு ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கிற போதிலும், இன்னமும் பிள்ளைகள் தங்களுடைய தாய்ப்பாலுக்காக கதறுவதுபோல, நேர்மையும், உத்தமுமான இருதயங்களைக் கொண்ட மானிடரின் இருதயங்கள் தேவனுக்காக இன்னமும் கதறுகின்றன. கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மையல்லாமல் ஜீவிக்க முடியாது. தாவீது, “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” என்று கூறினது போலேயாகும். அவன் அதை உடையவனாயிருக்க வேண்டும் அல்லது மரிக்க வேண்டும். 458 பிதாவே, நாங்கள் வேதவாக்கியங்களினூடாக முன்னும் பின்னுமாக அலசி ஆராய்ந்துள்ளோம். வித்தியாசமாயிருக்க வேண்டுமென்பதற்காக அல்ல, ஆனால் நாங்கள் இந்த வேதபாட கருத்தரங்குகளை காண்கிறோம், இந்த வேத சாஸ்திர மாணவர்கள் மனுஷருடைய கற்பனைகளின்படி போதிக்கிறார்களேயல்லாமல், தேவனுடைய கற்பனைகளின்படியாய் அல்ல. ஆகையால் கர்த்தாவே, நாங்கள் இந்த மனிதர்களை நிந்திக்கிறதில்லை, ஆனால் அவர்கள் போதிக்கிற அந்தக் காரியங்களையே நாங்கள் நிந்திக்கிறோம். ஆகையால், கர்த்தாவே, அவர்கள் எங்களுடைய சகோதரர்களாக வேண்டும் என்றே நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அவர்களுடைய தவறுகளுக்காக நீர் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அவர்கள் வேதவாக்கியத்தண்டைக்கு வந்து, அதை வாசித்து, ஏதோ ஒரு வேதபாட கருத்தரங்கு அதை போதிக்கிற விதமாய் அல்ல, ஆனால் தேவன் அதை எழுதியிருக்கிறார் என்ற முறையின்படியே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 459 தேவனே, இன்றிரவு தண்ணீர் ஞானஸ்நானத்திற்காக வந்து கொண்டிருக்கிற இந்த நபர்களுக்கு, எங்களுடைய தீரமான போதகர் இங்கிருந்து இந்த பிரசங்கபீடத்திற்கு நடந்து சென்று, சுவிசேஷத்தை, இந்த மாறாத சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அதன்பின்னர் அவர்களை தண்ணீர் தொட்டியில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும், கர்த்தாவே, இவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள நீர் அருள்புரிய வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம், ‘ஏனென்றால், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்று நீர் வாக்களித்தீர். தேவனுடைய ஆவியானவர்தாமே தண்ணீரின் மேல் காத்திருந்து, இந்த நபர்களை ஏற்றுக்கொள்வாராக, ஏனென்றால் நாங்கள் அவர்களை உம்முடைய கரங்களில் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தில் ஒப்புவிக்கிறோம். ஆமென்.